6 சதங்கள்... 1202 ரன்கள் - 2018-ம் ஆண்டின் “பிக்பாஸ்” விராட் கோலி !

Virat Kohli | இந்திய அணிக்கு எப்போதுமே சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் விராட் கோலிக்கு இந்த ஆண்டு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது.

Web Desk | news18
Updated: November 2, 2018, 9:47 PM IST
6 சதங்கள்... 1202 ரன்கள் - 2018-ம் ஆண்டின் “பிக்பாஸ்” விராட் கோலி !
விராட் கோலி (கோப்புப் படம்)
Web Desk | news18
Updated: November 2, 2018, 9:47 PM IST
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த ஆண்டில் இதுவரை 14 இன்னிங்ஸ் விளையாடி 6 சதங்களுடன் 1202 ரன்கள் குவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 16 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த 16 ரன் எடுத்த போட்டியில் மட்டுமே அவர் ஜொலிக்கவில்லை. இந்த ஆண்டில் அவர் விளையாடியுள்ள 14 ஒருநாள் இன்னிங்சில் மொத்தம் 1202 ரன்கள் அடித்து ஆண்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

விராட் கோலி


கோலிக்கு அடுத்ததாக இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 22 இன்னிங்ஸ் விளையாடி 1000 ரன்கள் எடுத்துள்ளார். கோலியின் ரன் ஆவரேஜ் 133.55, ஜானியின் ரன் ஆவரேஜ் 46.59 ஆகும். ரன்கள் குவித்தது மட்டுமல்லாமல் 6 சதங்கள் அடித்து அதிலும் கோலி முதலிடம் பிடித்துள்ளார் . அவருக்கு அடுத்து 5 சதங்களுடன் ரோகித் சர்மா உள்ளார்.

இந்திய அணிக்கு இந்த ஆண்டில் இன்னும் ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் தொடர் இருப்பதால் விராட் கோலி இன்னும் கூடுதலாக ரன்கள் அடிக்க வாய்ப்பு உள்ளது.

ஓர் ஆண்டில் அதிக ஆவரேஜ் வைத்த வீரர்கள் லிஸ்ட்:மேற்கண்ட பட்டியலில் விராட் கோலியை விட குறைந்த ரன்களே மைக் ஹஸ்ஸி அடித்திருந்தாலும் அவர் 14 இன்னிங்சில் நாட் அவுட் இன்னிங்ஸ் அதிகமாக விளையாண்டுள்ளார். இதனால், அவரது ஆவரேஜ் அதிகமாகும்.

ஓர் ஆண்டில் அதிகபட்ச சராசரி ஆவரேஜ் வைத்த வீரர்கள்:சராசரி ஆவரேஜ் அடிப்படையில் விராட் கோலி இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஒருநாள் போட்டி வரலாற்றில் ஓர் ஆண்டில் சிறந்த பங்களிப்பை அளித்த வீரர்கள் பட்டியல்:மேற்கண்ட பட்டியலில் சர் ரிச்சர்ட்ஸ் குறைந்த போட்டியில் விளையாடி அதிக ஆவரேஜ் வைத்துள்ளதால் முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் எடுத்துள்ள ஆவரேஜ் குறைவு என்றாலும், ரன்கள் மற்றும் நாட் அவுட் இன்னிங்ஸை கணக்கில் கொண்டு இரண்டாம் இடத்தில் உள்ளார்.

2007-ம் ஆண்டில் மேத்யூ ஹைடன் 1601 ரன்கள் குவித்திருந்தாலும் அவர் அதிக இன்னிங்ஸ் விளையாடியதால் பட்டியலில் பின்தங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்..

சர்கார் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கோரி பதவி விலகிய கே.பாக்யராஜ் - பரபரப்பு அறிக்கை

இறுதிச்சடங்கு முடிந்து 15 நாட்களுக்கு பின் வீடு திரும்பிய இளைஞர்

First published: November 2, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...