ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Video : சட்டையையும் கழற்றுங்கள்... மைதானத்தில் கோபத்தின் உச்சத்திற்கு போன கோலி.. என்ன நடந்தது?

Video : சட்டையையும் கழற்றுங்கள்... மைதானத்தில் கோபத்தின் உச்சத்திற்கு போன கோலி.. என்ன நடந்தது?

விராட் கோலி

விராட் கோலி

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி மைதானத்தில் கோபமடையும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, தற்போது வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (IND vs BAN) விளையாடி வருகிறார். விராட் போட்டியின் போது மைதானத்தில் எதிரணி வீரர்களை வசைபாடுவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

டாக்காவில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல்இன்னிங்சில் வங்கதேசம் 227 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி பந்த் மற்றும் ஸ்ரேயாஸின் அபார ஆட்டத்தால் 314 ரன்கள் குவித்து 87 ரன்கள் முன்னிலை வகித்தது.

Also Read : 6 ஆல் ரவுண்டர்கள் உடன் ரெடியானது சிஎஸ்கே playing xi.. இந்த வருடம் அதிரடி சரவெடி தான்

இதனிடையே 2-வது நாள் முடிவில் வங்கதேசம் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தது. வங்கதேசம் 2-வது நாள் முடிவில் 6 ஓவர்களை எதிர்கொண்டது. வங்கதேச தொடக்க வீரர்கள் நஜ்மல் மற்றும் ஜாகீர் உசேன் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது சூரிய வெளிச்சம் மங்க தொடங்கியதால் ஒவர்களை விரைந்து வீச இந்திய அணி முனைப்பு காட்டியது. ஆனால் வங்கதேச வீரர்கள் நேரத்தை கடத் வேண்டுமென்பதால் பானங்களை எடுத்து கொள்வது, பேட்டை மாற்றுவது மற்றும் ஷூ லேஸை கழற்றி மாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டது. இதனால் மைதானத்தில் இருந்த விராட் கோலி சட்டையும் கழற்றி மாட்டுங்கள் என்பது கோபத்தில் சைகை செய்தார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. நேரத்தை வீணடிக்க வங்கசேத வீரர்கள் இதுப்போன்று நடந்து கொண்டதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே வங்கதேச அணி டாக்கா டெஸ்டின் 3-வது நாள் ஆட்டத்தில் முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. வங்கதேசம் தற்போதைய நிலையில் 6 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் எடுத்துள்ளது.

First published:

Tags: Ind vs Ban, India vs Bangladesh, Virat Kohli