• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கண்ணான கண்ணே வாமிகா; உன்னைப் பார்க்க என் தந்தை இல்லையே- விராட் கோலி உணர்ச்சிகரம்

கண்ணான கண்ணே வாமிகா; உன்னைப் பார்க்க என் தந்தை இல்லையே- விராட் கோலி உணர்ச்சிகரம்

விராட் கோலி.

விராட் கோலி.

விராட் கோலி தன் மகள் வாமிகாவைப் பார்க்க தன் தந்தை உயிருடன் இல்லையே என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    விராட் கோலி தன் மகள் வாமிகாவைப் பார்க்க தன் தந்தை உயிருடன் இல்லையே என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

    2006-ல் விராட் கோலியின் தந்தை மாரடைப்பினால் மரணமடைந்தார்.

    இங்கிலாந்துக்கு எதிரான தொடர் நடைபெற்று வரும் தருணத்தில் விராட் கோலி தினேஷ் கார்த்திக்கிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

    Anushka Sharma - Virat Kohli at the airport with baby: Photos going viral!

    இந்த நேர்காணலின் ஒரு சிறு துளி சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டது, அதில், தன் தந்தையை தான் இழந்தது குறித்தும், தன் குழந்தை வாமிகா தன் தாத்தாவை இழந்திருப்பதாகவும் வாமிகாவை பார்க்கவாவது அவர் இன்னும் சிறிது காலம் உயிருடன் இருந்திருக்கலாம் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

    “நான் விளையாடியதையும் என் தந்தை பார்க்கவில்லை. இப்போது என் மகளையும் அவர் பார்க்கவில்லை. இப்போது வாமிகா மூலம் என் தாயின் முகத்தில் சிரிப்பை நான் பார்க்கிறேன்.

    என் தந்தை இருந்திருந்தால் அவர் எப்படி மகிழ்ச்சியுடன் பேத்தியுடன் விளையாடியிருப்பார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன், என்று விராட் கோலி தன் சொந்த வாழ்க்கை குறித்து பேசினார்.

    Anushka Sharma - Virat Kohli at the airport with baby: Photos going viral!

    இது தொடர்பாக தினேஷ் கார்த்திக் தன் வலைத்தளப் பக்கத்தில் “இது என்ன ஒரு அருமையான வாரம்! உலக கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாருடன் தந்தைமை, அவரது காதல் வாழ்க்கை ஆன்மீகம், சமூக ஊடகம், தலைமைத்துவம், டீம் இந்தியா” என்று அளவளாவினோம்” என்று பதிவிட்டுள்ளார்.

    தன் தந்தை குறித்த உணர்ச்சிகரத்துக்குப் பிறகு அதே பேட்டியில் விராட் கோலி அனுஷ்கா சர்மா பற்றி, “நான் அனைவரிடமும் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தேன். அனுஷ்காவுடனும் ஜோக் அடித்துக் கொண்டிருந்தேன் அப்போது அனுஷ்கா, ‘என் வாழ்நாளில் இப்போதுதான் குழந்தைப் பருவம் பற்றி இவ்வளவு ஜோக்காக ஒருவர் பேசுவதைக் கேட்கிறேன்’ என்றார். எனவே இதுதான் இருவருக்குமான இணைப்பை ஏற்படுத்திய தருணம்” என்றார் விராட் கோலி.

    இருவரும் 2014-ல் விளம்பர ஷூட்டிங்கில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: