ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

என்னப்பா இது... வீடியோ கேம் பார்த்த மாறி இருக்கு.. சூர்யகுமார் இன்னிங்சை பாராட்டி தள்ளிய விராட் கோலி

என்னப்பா இது... வீடியோ கேம் பார்த்த மாறி இருக்கு.. சூர்யகுமார் இன்னிங்சை பாராட்டி தள்ளிய விராட் கோலி

சூர்யகுமார் யாதவ் -விராட் கோலி

சூர்யகுமார் யாதவ் -விராட் கோலி

Suryakumar Yadav | சூர்யகுமார் யாதவை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் வெகுவாக பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சதம் அடித்த சூர்யகுமார் யாதவை வெகுவாக விராட் கோலி பாராட்டியுள்ளார்.

  நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது ஆட்டம் மவுன்ட் மாங்கானு மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

  அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ரிஷப் பந்த் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றோரு தொடக்க வீரர் இஷான் கிஷான் 36 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

  இதையும் படிங்க: FIFA World Cup : எதிரணியினருக்கு லஞ்சம் கொடுத்து கோப்பையை வெல்ல கத்தார் திட்டம்? வெளியான பரபரப்பு குற்றச்சாட்டு

  இரண்டாவதாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை குஷிப்படுத்தினார். தனக்கே உரிய பாணியில் பந்துகளை நால புறமும் சுழன்று அடித்து அதிரடியாக 49பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். மவுன்ட் மாங்கானு மைதானம் சிறிதாக இருந்ததால் 360 டிகிரி கோணங்களிலும் பந்துகளை பறக்கவிட்டார். 51 பந்துகளில் 7 சிக்சர்கள் 11 பவுண்டரிகளை விளாசி 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி இறுதியாக 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது.

  சூர்யகுமார் யாதவின் இந்த இன்னிங்சை பாராட்டி சமூகவலைதளங்களில் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி மழை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில் சூர்யகுமாரை வெகுவாக பாராட்டியுள்ள விராட் கோலி வாழ்த்து தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஏன் உலகின் சிறந்தவர் என்பதைக் காட்டும் நியூமெரோ யூனோ என்றும் இதை நேரலையில் பார்க்கவில்லை ஆனால் இது அவருடைய மற்றொரு வீடியோ கேம் இன்னிங்ஸ் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என விராட் கோலி சூர்யகுமார் யாதவை பாராட்டியுள்ளார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: India vs New Zealand, Suryakumar yadav, Virat Kohli