ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கோலி டிரிபிள் செஞ்சுரி அடிப்பார்- கபில் தேவ் நம்பிக்கை

கோலி டிரிபிள் செஞ்சுரி அடிப்பார்- கபில் தேவ் நம்பிக்கை

கோலி டான்ஸ்

கோலி டான்ஸ்

கேப்டன் பதவியினால்தான் கோலியின் பேட்டிங் தடுமாறுகிறது என்ற வாதத்தை ஏற்காத லெஜண்ட் கபில் தேவ் கேப்டன்சியில்தான் கோலி சிறப்பாகச் செயல்பட்டுள்ளார் என்றார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கோலியின் பேட்டிங் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சதம் கூட இல்லாமல், ஒரே மாதிரி பந்துகளில் ஒரே மாதிரி அவுட் ஆவது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு கவலையளிக்க கோலியே டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி பேட்டிங்கில் மீண்டும் பழைய நம்பர் 1 நிலையை எட்ட முடிவெடுத்திருப்பதாகவும் இதனால் ரோகித் சர்மாவைடம் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடர் கேப்டன்சியை பகிர்ந்தளிக்கவும் பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

  கோலி இதுவரை 65 டெஸ்ட், 95 ஒருநாள், 45 டி20 போட்டிகளில் கேப்டன்சி செய்துள்ளார். இந்நிலையில் டெஸ்ட் அணிக்கு மட்டும் கோலியை கேப்டனாக வைத்துக் கொள்வது என்ற முடிவும் அபத்தமாகவே படுகிறது, ஏனெனில் அவர் டெஸ்ட் போட்டிகளில்தான் திணறுகிறார். அதில் அவரை கேப்டனாக வைத்து மற்ற வடிவங்களில் அவர் நன்றாக ஆடிவரும்போது சுமையைக் குறைக்கிறோம் என்று கூறுவது பொருத்தமாக இல்லை.

  இந்நிலையில் முன்னாள் கிரேட் ஆல்ரவுண்டரும் கேப்டனுமான கபில் தேவ், கோலியின் தடுமாற்றம் பற்றிக் கூறும்போது, “இத்தனையாண்டுகளாக அவர் ரன்கள் எடுத்துவரும்போது கேப்டன்சி பற்றிய கேள்வி எழவில்லை, திடீரென கேப்டன்சி பற்றி கேள்வி எழுவது ஏன்? அவர் இரட்டைச்சதங்களையும் சதங்களையும் குவித்த போது அவருக்கு அழுத்தங்கள் இல்லையா?

  எனவே அவர் கேப்டன்சி மீது கவனம் செலுத்த வேண்டாம், அவரது திறமையைப் பாருங்கள். கோலியின் ரன் வரைபடம் சற்று மேலும் கீழுமாக உள்ளது, ஆனால் இது எத்தனை நாளைக்கு நீடிக்கும்? 28-32 வயதில்தான் உண்மையில் ஒருவர் பெரிய உச்சங்களை எட்டுவது வழக்கம். அவர் தன் பழைய பேட்டிங் பார்முக்கு திரும்பினார் என்றால் சதம், இரட்டைச் சதம் ஏன் டிரிபிள் செஞுரி கூட அடிப்பார்.

  Also Read: இந்த 3 ஐபிஎல் சாதனைகளை யாராவது உடைக்க முடியுமா?

  கோலி அபாரமாக உடல் தகுதியை பராமரித்து வருகிறார். அவர் பெரிய ஸ்கோரை எடுக்கப் பார்க்க வேண்டும் அவ்வளவே” என்றார் கபில் தேவ்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Captain Virat Kohli, Virat Kohli