ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘ஒரு நாள் போட்டிகளில் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார்’ – WWE முன்னாள் சாம்பியன் நம்பிக்கை

‘ஒரு நாள் போட்டிகளில் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார்’ – WWE முன்னாள் சாம்பியன் நம்பிக்கை

விராட் கோலி - ட்ரூ மெக்கின்டைர்

விராட் கோலி - ட்ரூ மெக்கின்டைர்

கிரிக்கெட் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் ஒவ்வொன்றாக விராட் கோலியால் முறியடிக்கப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் என்ற சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று WWE முன்னாள் சாம்பியன் ட்ரூ மெக்கின்டைர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவு விராட் கோலி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிராக நடந்த 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி 2 சதங்களை அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். இந்நிலையில் மல்யுத்த வீரரிடம் இருந்து இப்படியொரு கருத்து வந்துள்ளது.

ஸ்காட்லாந்தை சேர்ந்த ட்ரூ மெக்கின்டைர் தனது ட்விட்டர் பதிவில், ‘இலங்கை அணிக்கு எதிரான விராட் கோலியின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. விராட் கோலி வித்தியாசமான ஆட்டக்காரர். நிச்சயமாக அவர் ஒருநாள் போட்டிகளில் சச்சினின் சாதனையை முறியடித்து 50 சதங்களை அடிப்பார்’ என்று தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் 51 சதங்களையும், டெஸ்ட் போட்டிகளில் 49 சதங்களையும் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் கெரியரில் 100 சதங்களை பதிவு செய்துள்ளார்.

விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்களையும், ஒருநாள் போட்டிகளில் 46 சதங்களையும் அடித்திருக்கிறார். சச்சினின் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் என்ற ரிக்கார்டை முறியடிப்பதற்கு விராட் கோலிக்கு இன்னும் 4 சதங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. இந்த ஆண்டுக்குள் அந்த சாதனையை விராட் கோலி ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.  இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் கோலி 166 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சச்சினின் 2 சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

இந்தியாவில் நடந்த சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 20 சதங்களை அடித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது. அதனை இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி , சச்சினின் சாதனையை சமன் செய்திருந்தார். இந்நிலையில் ஞாயிறன்று மீண்டும் சதம் விளாசி சச்சினின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். ஒரே அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட , அதிகபட்ச சதம் என்ற அடிப்படையில், சச்சினின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 9 சதங்களே சாதனையாக இருந்தது. இதனை ஞாயிறன்று நடந்த இலங்கைக்கு எதிரான சதத்தின் மூலம் கோலி முறியடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக கோலி இதுவரை 10 சதங்களை விளாசியுள்ளார்.

First published:

Tags: Cricket