Home /News /sports /

விராட் கோலி 3வது தொடக்க வீரர், ராகுல்தான் ஓப்பனிங் - ரோஹித் சர்மா உறுதி

விராட் கோலி 3வது தொடக்க வீரர், ராகுல்தான் ஓப்பனிங் - ரோஹித் சர்மா உறுதி

இந்திய அணி

இந்திய அணி

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் எங்களது தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல் என்னுடன் இணைந்து இறங்குவார் எனவும் ரோஹித் ஷர்மா பேட்டி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Punjab, India
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டி நாளை மொஹாலியில் இரவு 7:30 மணிக்கு தொடங்கவிருக்கிறது.

பயிற்சி முடிந்த பிறகு நிருபர்களைச் சந்தித்த ரோஹித் சர்மா, அணிச்சேர்க்கை, தொடக்க வீரர்கள் யார் என்ற கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அதாவது ஆப்கானிஸ்தான் போட்டியன்று அன்று வீசிய விட்டேத்தியான பவுலிங்கில் விராட் கோலி சதம் விளாசி தன் 3 ஆண்டுகால சத வறட்சிக்கு நீர்பாய்ச்சி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அந்த இன்னிங்சை வைத்து அவரை தொடக்க வீரராக்குவதெல்லாம் பேரபாயம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வரும் நிலையில் ரோஹித் சர்மா,  விராட் கோலி 3வது தொடக்க வீரராக தெளிவாகவே உள்ளார் என்பதை உறுதிபடுத்தினார்.

ரோஹித் சர்மா கூறியதாவது:
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி சதம் விளாசினார். அதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. இதைத் தொடர்ந்து தொடக்க வீரர் வரிசை குறித்து நானும், பயிற்சியாளர் ராகுல் திராவிட்டும் ஆலோசனை மேற்கொண்டோம்.

மேலும் படிக்க : கோலி, பாண்டே, ஜடேஜாவுக்கு கேப்டனாக இருந்த வீரர் 30 வயதில் ஓய்வு பெற்ற பரிதாபம்

வரும் தொடர்களில் ஏதாவது சில ஆட்டங்களில் கோலி தொடக்க வீரராக இறக்கப்படலாம். ஏனெனில் அவர் தான் எங்களது 3-வது தொடக்க ஆட்டக்காரராக இருக்கிறார். அதே சமயம் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் எங்களது தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல் என்னுடன் இணைந்து இறங்குவார்.

அந்த வரிசையில் உலக கோப்பை போட்டியில் அதிகமான பரிசோதனை முயற்சிகளை செய்யமாட்டோம். இந்திய அணிக்காக ராகுலின் செயல்பாடு கவனிக்கப்படுவதில்லை. அவர் இந்தியாவின் மிகவும் முக்கியமான வீரர். கடந்த 2-3 ஆண்டுகளில் அவரது சாதனைகளை உற்று நோக்கினால், ராகுலின் பங்களிப்பும் அவர் எத்தனை முக்கியமான வீரர் என்பதும் தெரியும்’ என ரோகித் சர்மா கூறினார்.
Published by:Raj Kumar
First published:

Tags: India captain Rohit Sharma, Indian cricket team, INDvAUS, Virat Kohli

அடுத்த செய்தி