Home /News /sports /

ரகானே, புஜாராவுக்கு மட்டும்தான் ரஞ்சியில் ஆட அட்வைஸா? - கோலிக்கு இல்லையா?

ரகானே, புஜாராவுக்கு மட்டும்தான் ரஞ்சியில் ஆட அட்வைஸா? - கோலிக்கு இல்லையா?

கோலி

கோலி

விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகிய பின்பே அல்லது விலக்கப்பட்ட பின்பே பேட்டிங்கில் கவனம் செலுத்தப் போவதாகக் கூறினார், ஆனால் அவரது மன நிலை விட்டேத்தியான மனநிலையில் உள்ளதால் அவரது ஆட்டத்தில் பழைய விறுவிறுப்பு இல்லை. அவரது உடல் மொழியும் அணியை வெற்றி பெறச் செய்யுமாறு இல்லை.

மேலும் படிக்கவும் ...
விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகிய பின்பே அல்லது விலக்கப்பட்ட பின்பே பேட்டிங்கில் கவனம் செலுத்தப் போவதாகக் கூறினார், ஆனால் அவரது மன நிலை விட்டேத்தியான மனநிலையில் உள்ளதால் அவரது ஆட்டத்தில் பழைய விறுவிறுப்பு இல்லை. அவரது உடல் மொழியும் அணியை வெற்றி பெறச் செய்யுமாறு இல்லை.

இது எல்லா அணிகளுமே நடைபெறுகிற வழக்கம்தான். ரிக்கி பாண்டிங் கேப்டன்சியில் மைக்கேல் கிளார்க் சரியாக ஆடவில்லை, ஆனால் தான் கேப்டனாக வந்த பிறகு வெளுத்து வாங்கினார், கோலி அப்படியல்ல, அவர் தோனியின் கீழ் பிரமாதமாக ஆடினார், ஆனால் இப்போது ரோஹித் சர்மாவின் கீழ் அவருக்கு பேட்டிங் மறந்தது போல் ஆடுகிறார்.

இன்னும் சொல்லப்போனால் தன் கேப்டன்சியில் பேட்டிங்கில் எழுச்சி பெற்ற விராட் கோலி தன் கேப்டன்சியிலேயே சோடை போய் கடைசி 2 இரண்டரை ஆண்டுகளாக எந்த வடிவத்திலும் சதம் அடிக்க முடியவில்லை. அதே போல் கோலி எதிரணி வீரர்கள் நன்றாக ஆடினால் தன் காழ்ப்பை தன் உடல் மொழியில் காட்டுகிறாரே தவிர, தன் விக்கெட்டை எடுத்த பவுலரை சாத்தி எடுக்க வேண்டும் என்ற ஆக்ரோஷம் மட்டும் இல்லை, ஆனால் இவரைத்தான் ஆக்ரோஷத்தின் கிங் என்று வர்ணிக்கிறார்கள்.

சுனில் கவாஸ்கர் மட்டை ஒருமுறை மால்கம் மார்ஷல் பவுன்சரில் பறந்தது. அவரும் ஆட்டமிழந்தார், ஆனால் அடுத்ததான டெல்லி டெஸ்ட் போட்டியில் 94 பந்துகளில் சதம் அடித்தார், இப்போதைய தல ரசிகர்களுக்கோ, ‘கிங்’ கோலி என்கிறார்களே அவரின் ரசிகர்களுக்கோ தெரியுமா இது? வரலாறு முக்கியம் அமைச்சரே! சச்சின் டெண்டுல்கர் சென்னையில் ஷேன் வார்ன் பந்தில் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆனார். ஆனால் அடுத்த இன்னிங்ஸே இறங்கி ஒரு 155 ரன்களை மூன்றரை மணி நேர ஆட்டத்தில் விளாசி சேப்பாக்கத்தை அலற விட்டாரே. அது போன்று கோலி ஏதாவது செய்திருக்கிறாரா என்றால் தெரியவில்லை.மாறாக மாட் பிலாண்டர் முதல் கைல் ஜேமிசன், டிம் சவுதி, கொலின் கிராண்ட்ஹோம் உட்பட டாப் பவுலர்கள் முதல் சொத்த பவுலர்கள் வரை கோலியை தட்டிப் போட்டு எடுக்கின்றனர். ஸ்பின்னர்களிடமும் சொல்லி சொல்லி ஆட்டமிழக்கிறார்.

எனவே அவர் இப்படியே விட்டேத்தியாக ஆடினால் பவர் பிடுங்கப்பட்டவுடன் பல் பிடுங்கப்பட்டவராக ஆடினால் விரைவில் இந்திய அணியிலிருந்தும் நீக்கப்படுவார். கோலி போன்ற ஒரு பேட்ஸ்மெனை இழப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதாக இருக்க முடியாது, ஆனால் பந்து கோலியின் கோர்ட்டில் தான் இருக்கிறது.

2014-ல் இங்கிலாந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் கோலியை சொல்லி சொல்லி காலி செய்தார், ஆனால் அதற்கு 2018- தொடரில் கோலி ஒருமுறை கூட அவரிடம் விக்கெட் கொடுக்கவில்லை என்பதும், அந்தத் தொடரில் 593 ரன்களை விளாசியதும் கவனிக்கத்தக்கது, அந்த டைப் கோலியை மீண்டும் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே. அவரது ஆட்டத்தில் இருந்த சரளபாவம் போய் விட்டது.

அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் ஆட வேண்டும். அப்போதுதான் பலதரப்பட்ட இளம் வேகப்பந்து வீச்சாளர்களையும், வளர்ந்து வரும் ஸ்பின்னர்களின் வெரைட்டியான பந்துகளையும் வெரைட்டியான உள்நாட்டு பிட்ச்களிலும் ஆட வாய்ப்புக் கிடைக்கும். தோனிக்கு பேட்டிங் மறந்து போனதற்குக் காரணம், அவர் உள்நாட்டுப் போட்டிகளில் ஆடியதில்லை என்பதே. கோலியும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதே நம் விருப்பம்.

இதையும் படிங்க: ஐபிஎல் ஏலத்துக்கு உலகக்கோப்பை வென்ற எட்டு யு-19 வீரர்களுக்கு அனுமதி இல்லை- ஏன் தெரியுமா?

ரகானே, புஜாராவுக்கு ரஞ்சி கிரிக்கெட்டில் ஆட அறிவுரை வழங்கிய கங்குலி, கோலிக்கு ஏன் அதே அறிவுரையை வழங்கவில்லை? எந்த ஒரு தனிநபரும் அது கோலியாக இருந்தாலும் கங்குலியாக இருந்தாலும் சச்சினாகவே இருந்தாலும் கிரிக்கெட் ஆட்டத்தை விட பெரியவர்கள் அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இப்போதைக்கு கோலிக்குத் தேவை பிரேக், ரஞ்சியில் போய் பேட்டிங்கை எஞ்ஜாய் செய்ய வேண்டியதுதான்.
Published by:Muthukumar
First published:

Tags: Ind vs WI ODI, Virat Kohli

அடுத்த செய்தி