கோலி எங்கள் பேட்ஸ்மேன்களை அவமானப்படுத்தி ஆதாயமடைந்தார் - வங்கதேச வீரர் குற்றச்சாட்டு

Virat Kohli | கோலி உடனான மோதல் போக்கு 2008-ம் ஆண்டு U19 போட்டிகளில் தொடங்கியதாக ரூபல் தெரிவித்துள்ளார்.

கோலி எங்கள் பேட்ஸ்மேன்களை அவமானப்படுத்தி ஆதாயமடைந்தார் - வங்கதேச வீரர் குற்றச்சாட்டு
விராட் கோலி -2008 U19 உலகக்கோப்பை
  • Share this:
விராட் கோலி எங்கள் பேட்ஸ்மேன்களை அவமானப்படுத்தி ஆதாயமடைந்துள்ளார் என்று U19 போட்டிகளில் விளையாடிய தருணத்தை வங்கதேச வீரர் ரூபல் உசைன் கூறியுள்ளார்.

ரூபல் உசைன் மற்றும் விராட் கோலி இருவரும் U19 போட்டிகளிலேயே எதிரணிகளில் விளையாடி உள்ளனர். இவர்கள் இருவருக்கும் பல முறை களத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 2011 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தின் போது விராட் கோலி, ரூபலுடன் ஆக்ரேஷமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மெல்போர்னில் நடைபெற்ற 2015 உலகக் கோப்பையின் 2-வது காலிறுதி போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை ரூபல் வீழ்த்திய போது மிகப் பெரிய கொண்டாடத்தில் ஈடுப்பட்டார். கோலி முக்கியமான கட்டத்தில் அவுட்டாக்கிய சந்தோஷத்தை அவர் வித்தியாசமாக வெளிப்படுத்தினார்.


கோலி உடனான மோதல் போக்கு 2008-ம் ஆண்டு U19 போட்டிகளில் தொடங்கியதாக ரூபல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஃபேஸ்புக் நேரலையில் பேசும் போது, “U19 போட்டிகளிலிருந்தே கோலிக்கு எதிராக விளையாடி உள்ளேன். இதனால் அப்போது இருந்தே எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. U 19 போட்டிகளில் அவர் எங்கள் பேட்ஸ்மேன்களை பல முறை அவமானப்படுத்தி ஆதாயமடைந்துள்ளார். இப்போது இது அவ்வளவு அதிகமாக இருக்காது.

தென்னாப்பிரிக்கா முத்தரப்பு போட்டி ஒன்றில் இதுப்போன்ற செயலில் அவர் ஈடுபட்டடார். அப்போது நான் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். நடுவர் இதில் தலையிட வேண்டியிருந்தது“ என்றார்.

வங்கதேச வீரர் ரூபல் ஹொசைன் 101 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 126 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading