• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய வீரரின் செயலால் கேப்டன் விராட் கோலியை எச்சரித்த நடுவர்! - வீடியோ

இந்திய வீரரின் செயலால் கேப்டன் விராட் கோலியை எச்சரித்த நடுவர்! - வீடியோ

INDvsNZ

INDvsNZ

Inida vs Newzealand | நியூசிலாந்து 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இந்திய வீரரின் செயலுக்கு நடுவர் கண்டனம் தெரிவித்தார்.

  • Share this:
    நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்கள் விதியை மீறி நடந்து கொண்டதாக விராட் கோலியை களநடுவர் எச்சரித்தார்.

    இந்தியா - நியுசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20, ஒரு நாள், டெஸ்ட் உள்ளிட்ட 3 தொடர்களும் ஒயிட்வாஷில் முடிவடைந்தது. டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றிய நிலையில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது.

    கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இந்திய வீரரின் செயலுக்கு நடுவர் கண்டனம் தெரிவித்தார். இந்த போட்டியின் 4-வது ஓவரின் போது லதாம் மற்றும் ப்ளூண்டெல் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது பைன் லெக் திசையில் பந்தை அடித்து சிங்கிள் எடுத்தனர். அப்போது இந்திய வீரர் ஒருவர் Two என்று கத்தி உள்ளார். இது பேட்ஸ்மேன்களை குழப்பும் விதமான உத்தியாக இருந்தது. போட்டியின் போது வீரர்கள் இதுபோன்று செயல்படுவது விதிமீறிய செயலாகும்.



    SmoothWholeGoldenretriever-mobile from Shubham Pandey on Vimeo.

    இந்திய வீரரின் இந்த செயலுக்கு விராட் கோலியை நடுவர் எச்சரித்துள்ளார். ஆனால் விராட் கோலி பேட்ஸ் மேன் 2 ரன்கள் எடுக்க வாய்ப்புள்ளது. அதனால் அவர் அதுபபோன்று கத்தினார் என்று விளக்கமளித்தார். இதை ஏற்க நடுவர் மறுத்து இதுபோன்று செயல்படக் கூடாது என்று விராட் கோலியை எச்சரித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: