Home /News /sports /

தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகுகிறார்?

தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகுகிறார்?

 ரோகித் சர்மா-கோலி -

ரோகித் சர்மா-கோலி -

விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா தம்பதியின் பெண் குழந்தை வாமிகாவுக்கு ஒரு வயது நிறைவடைவதையொட்டி விராட் கோலி அதைக்கொண்டாட தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா தம்பதியின் பெண் குழந்தை வாமிகாவுக்கு ஒரு வயது நிறைவடைவதையொட்டி விராட் கோலி அதைக்கொண்டாட தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    வாமிகா பிறந்தநாளை ஒட்டி அவர் ஜனவரி மாதத்தில் விடுப்பை கழிக்கத் திட்டமிட்டுள்ளர். ஹாலிடே டிரிப் ஒன்றையும் கோலி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனவரி 11ம் தேதி வாமிகாவுக்கு ஒரு வயது ஆகிறது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 19ம் தேதி தொடங்குகிறது.

    ஏற்கெனவே வாமிகா பிறந்த போது அடிலெய்ட் டெஸ்ட்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா தொடரிலிருந்தே விலகினார் விராட் கோலி. இப்போது குழந்தை முதல் பிறந்தநாளையொட்டி தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரிலிருந்து விலகுகிறார். அதாவது கிரிக்கெட்டின் கடுமையான ஷெட்யூல் தன் சொந்த வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையை பாதிக்காதவாறு ஓரளவுக்குப் பார்த்துக் கொள்கிறார் கோலி.

    கோலியிடமிருந்து பிடுங்கி ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் வழங்கியதிலிருந்தே பல பேச்சுகள், கிசுகிசுக்கள் வலம் வந்தவண்ணம் உள்ளன. இருவரும் நட்பு, நண்பனே நண்பனே என்று வெளியில் பாடிக்கொண்டாலும் உள்ளுக்குள் ஒருவரையொருவர் பயங்கரமாக காய்ந்து கொண்டுதான் இருப்பார்கள். இதுதான் மனித இயல்பு.

    இப்போது டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய ரோகித் சர்மாவுக்கு ஏற்கெனவே இருக்கும் ஹாம்ஸ்ட்ரிங் பிரச்சனையும் சேர ஒருநாள் தொடருக்கும் ரோகித் சர்மா சந்தேகமான நிலையில் கோலியும் இல்லாவிட்டால் யார் அணியை வழிநடத்துவது? அநேகமாக ரிஷப் பண்ட் தலைமையிலோ, ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலோ பொறுப்பு விழலாம்.

    தென் ஆப்பிரிக்கா தொடரின் கடைசி டெஸ்ட் ஜனவரி 11-15- நடைபெறுகிறது. ஜனவரி 19ம் தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இப்போது கோலியும் இல்லை, ரோகித் சர்மா, விராட் கோலி இருவரது ஈகோவும் சேர்ந்து இந்திய கிரிக்கெட்டை நாசம் செய்யாது இருந்தால் போதும். ராகுல் திராவிட்டுக்குத்தான் தலைவலி.

    இதையும் படிங்க: PAK vs WI: 2021-ல் 18-வது டி20 வெற்றி- பாகிஸ்தான் சாதனை- மே.இ.தீவுகளுக்கு சோதனை

    ஒருவிதத்தில் ரோகித், கோலி தலைவலிகள் இல்லாமல் இளம் வீரர்களை வைத்து ஆடுவதும் சிறப்புதான், பார்வையாளர்களுக்கும் புதிய வீரர்களை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Rohit sharma, Virat Kohli

    அடுத்த செய்தி