ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் முடிந்தவுடன் இந்தியா திரும்புகிறார்.
ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல் 2020 தொடரில் இந்திய அணி வீரர்கள் தற்போது விளையாடி வருகின்றனர். ஐ.பி.எல் 2020 தொடர் இறுதி போட்டி நவம்பர் 10-ம் தேதி நடைபெறுகிறது. ஐ.பி.எல் 2020 தொடருக்கு பின் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய வீரர்கள் 3 ஒரு நாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின் முதல் ஒரு நாள் போட்டி நவம்பர் 27-ம் தேதி சிட்னி மைதானத்தில் தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது. அதில் சில மாற்றங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் மற்றும் டி20 போட்டிக்கு விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருப்பார்.
டெஸ்ட் தொடரில் முதல் போட்டியுடன் கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்ப உள்ளார். ரோஹித் சர்மா மற்ற 3 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார். விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தற்போது கர்ப்பமாக உள்ளார். விராட் - அனுஷ்கா தங்களது முதல் குழந்தையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரவேற்க உள்ளனர்.
இதனால் அனுஷ்காவின் பிரசவத்தின் போது அவருடன் நாட்களை செலவிட விரும்புவதால் தந்தைவழி விடுமுறைக்கு விராட் கோலி பிசிசிஐ-யிடம் அனுமதி கோரியுள்ளார். இதனை பிசிசிஐ ஏற்றுக் கொண்டுள்ளது. விராட் கோலி விடுமுறையில் செல்வதால் ஆஸ்திரேலியா உடனான மற்ற 3 டெஸ்ட் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பு ஏற்க உள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்