மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் மூலம், விராட் கோலி இந்தியாவில் 200ஆவது சர்வதேச போட்டியில் விளையாடவுள்ளார். முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமே அவர் 76 ரன்கள் எடுத்துள்ள நிலையில், இந்தூர் போட்டியில் பெரிய ஸ்கோரை அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு முதல் உள்ளூரில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
இந்தியாவில் 199 சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட்+ஒருநாள்+டி20 ஆட்டங்கள்) பங்கேற்று விராட் கோலி 10,829 ரன்களை குவித்துள்ளார். சராசரி 58.22 ரன்கள். இவற்றில் 34 சதங்களும், 51 அரைச் சதங்களும் அடங்கும். அதிகபட்ச ரன் 254. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் கோலியின் ரன் குவிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டில் 3 போட்டிகளில் விளையாடி 116 ரன்களும் (சராசரி 19.33), 2021-இல் 11 போட்டிகளில் விளையாடி 536 ரன்களும் (சராசரி 28.21), 2022-இல் 6 போட்டிகளில் விளையாடி 265 ரன்களும் (சராசரி 26.50) எடுத்துள்ளார். இது கோலியின் டெஸ்ட் கெரியரில் மோசமான ரிக்கார்டாக எடுத்துக் கொள்ளலாம்.
உள்ளூரில் தனது 200ஆவது சர்வதேச போட்டியில் விராட் கோலி களம் காண உள்ள நிலையில், இந்தூர் டெஸ்டில் அதிக ரன்களை அவர் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 3923 ரன்களை எடுத்துள்ளார். இந்த டெஸ்டில் 77 ரன்கள் எடுத்தால் அவர் 4 ஆயிரம் ரன்களை எட்டுவார். இந்திய வீரர்களில் சச்சின் (7216), டிராவிட் (5598), சுனில் கவாஸ்கர் (5067), விரேந்தர் சேவாக் (4656) ஆகியோர் மட்டுமே 4 ஆயிரம் ரன்களை டெஸ்டில் கடந்துள்ளனர். அந்த வரிசையில் விராட் கோலியும் இணையலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket