இந்திய அணியில் இடம்பெறுவாரா தோனி? தேர்வு குழுவினரிடம் விராட் கோலி ஆலோசனை

இந்திய வீரர்கள் தொடர்ந்து விளையாடி வருவதால் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

இந்திய அணியில் இடம்பெறுவாரா தோனி? தேர்வு குழுவினரிடம் விராட் கோலி ஆலோசனை
இந்திய அணி
  • News18
  • Last Updated: July 19, 2019, 8:14 PM IST
  • Share this:
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சுற்றுப்பயணம் செல்லவிருக்கும் இந்திய அணி வரும் 21ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்திய அணியில் பங்கேற்கும் வீரர்கள் குறித்து தேர்வு குழுவின் 5 பேர் கொண்ட ஆலோசனை கூட்டத்தில் கேப்டன் விராட் கோலி பங்கேற்றார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான அணியில் அனுபவ வீரர் மகேந்திர சிங் தோனி இடம்பிடிப்பாரா என சந்தேகம் எழுந்துள்ளது. ஐபிஎல், உலகக் கோப்பை தொடர் என இந்திய வீரர்கள் தொடர்ந்து விளையாடி வருவதால் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதனால் தோனிக்கும் இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20, ஒரு நாள் போட்டிகளில் கேப்டன் கோலிக்கும், பும்ராவுக்கும் ஏற்கனவே ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கும் ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் கோலியும், பும்ராவும் தொடர்வர்கள். டெஸ்ட் போட்டிகளில் முதன்முறையாக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளதால் பலம் வாய்ந்த டெஸ்ட் அணிக்கு இவர்கள் திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன் தொடரில் ஒவ்வொரு வெற்றி முக்கியத்துவமானதாகும். முக்கிய வெளிநாடுகளில் கிடைக்கும் வெற்றி மிக முக்கியத்துவமானது.
First published: July 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading