புதிய இந்தியாவின் சரியான கேப்டன் விராட் கோலிதான்: நாசர் ஹுசைனின் ஆச்சரியப் பாராட்டு

கோலி-ஆண்டர்சன்.

சரியான நேரத்திற்கு வந்த சரியான கேப்டன் தான் விராட் கோலி. அவரது தலைமையின் கீழான புது இந்தியாவை அப்படியெல்லாம் ஓரங்கட்டி விட முடியாது என்று முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சரியான நேரத்திற்கு வந்த சரியான கேப்டன் தான் விராட் கோலி. அவரது தலைமையின் கீழான புது இந்தியாவை அப்படியெல்லாம் ஓரங்கட்டி விட முடியாது என்று முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

  பவுலர்களின் பேட்டிங்கினாலும் பவுலிங்கினாலும் இந்திய அணி வென்றது, கோலி ஒன்றையும் கழற்றவில்லை என்ற உண்மையை மறைத்து பலரும் லார்ட்ஸ் வெற்றியை அவர் மீது சாற்றுகின்றனர்.

  வெற்றி பெற்றால் புகழும் இவர்கள் தோற்றால் கோலியை ஒன்றும் சொல்வதில்லை அப்போது பவுலிங்கா, பேட்டிங்கா என்று குறைகளை வேறு இடத்தில் தேடுகின்றனர். கோலியை உயர்த்திப் பிடிப்பது வணிக நோக்கங்களுக்குத்தான் என்று நமக்குப் புரிகிறது.

  வாயால் வடை சுடுவதை நிறுத்தி அவர் எப்போது ரன்கள் எடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப அவரைப் புகழ்ந்து தள்ளுகிறார் நாசர் ஹுசைன்:

  இந்த நன்று வடிவமைந்த இந்திய அணியை வழிநடத்த சரியான நேரத்தில் வந்த சரியான கேப்டன் தான் விராட் கோலி. குறிப்பாக பவுலர்களுக்கு ஆக்ரோஷமான ஒரு கேப்டன் தேவைப்படுகிறது. கோலி ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதை அவர் அருமையாகப் பூர்த்தி செய்கிறார். லார்ட்ஸில் இதைப் பார்த்தோம்.

  இது எப்படி எனில் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் அமைதியானவர் ஆனால் அவர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு தாக்குதல் பவுலிங் வீசினார் பாருங்கள் அப்போதே இது கோலியின் கட்டளை என்பது புரிகிறது.

  கோலியின் ஆக்ரோஷம் எதிரணியினரை விரைவில் மடித்து அனுப்புவது. அதனால் அவர் எதிரணியின் மீது வசைகளைப் பொழிவார். நிறைய பேருக்கு அவருடன் ஆடுவத் பிடிக்காது, நிச்சயம் இங்கிலாந்து ரசிகர்களுக்கு அவரைப் பிடிக்காது. ஆனால் அதைப்பற்றி ஒரு ஊசிமுனை அளவு கூட கோலி கவலைப்பட மாட்டார்.

  இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் டங்கன் பிளெட்ச்சரிடம் கோலியைப் பற்றி கேட்டேன். அவர் கூறினார் கோலி ஒரு வின்னர், எப்படியாவது வெற்றி பெற வேண்டு அவ்வளவுதான் கோலி என்றார். கோலி கால்பந்து ஆடுவதைப் பார்க்க வேண்டும் என்றார் பிளெட்சர். சரிந்து வந்து எதிராளியின் பந்தை அவர் தடுப்பதிலிருந்தே அவர் எவ்வளவு போட்டி மனப்பான்மை மிக்கவர், எளிதில் விட்டுக் கொடுக்காதவர் என்பது புரியும். வெள்ளைப்பந்தில் அவர் இலக்கை விரட்டும்போது இறுதி லட்சியம்தான் தெரியும். எந்த ஒரு பவுலரையும் தன் இலக்கை எட்டுவதற்கு இடையூறாக வர அவர் அனுமதிப்பதில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இவ்வாறு கூறுகிறார் நாசர் ஹுசைன்.
  Published by:Muthukumar
  First published: