Home /News /sports /

கோலியிடமே கேலியா...! 2 வருடங்களுக்கு பின் சரியான பதிலடி கொடுத்து பழிதீர்த்த விராட் - வீடியோ

கோலியிடமே கேலியா...! 2 வருடங்களுக்கு பின் சரியான பதிலடி கொடுத்து பழிதீர்த்த விராட் - வீடியோ

INDvsWI

INDvsWI

India vs WestIndies | Virat Kohli | Kesrick Williams | விராட் கோலியின் விக்கெட்டை கொண்டாடும் வகையில் வில்லியம்ஸ் செக் புக்கில் கையெழுத்து போடுவது (chequebook-ticking) வித்தியாசமான செய்கை செய்து கோலியை வெறுப்பேற்றுவார்.

    ஜமைக்காவில் 2 வருடங்களுக்கு முன் தன்னை கிண்டல் செய்த மேற்கிந்திய பவுலர் கெஸ்ரிக் வில்லியம்ஸ்க்கு சரியான பதிலடி கொடுத்து விராட் கோலி பழிதீரத்துக் கொண்டார்.

    இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதிய முதல் டி20 போட்டி ஐதராபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 207 ரன்கள் குவித்தது. இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் விராட் கோலியின் அபார ஆட்டத்தால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் 94 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றி பெற செய்த கேப்டன் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மேலும் மேற்கிந்திய தீவுகள் அணி பவுலர் கெஸ்ரிக் வில்லியம்ஸையும் விராட் பலி தீர்த்து கொண்டார்.

    ஜமைக்காவில் 2017ல் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 29 ரன்கள் எடுத்திருந்த போது கெஸ்ரிக் வில்லியம்ஸ் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறுவார். விராட் கோலியின் விக்கெட்டை கொண்டாடும் வகையில் வில்லியம்ஸ் செக் புக்கில் கையெழுத்து போடுவது (chequebook-ticking) வித்தியாசமான செய்கை செய்து கோலியை வெறுப்பேற்றுவார்.



    அதை மறக்காத கோலி நேற்று நடைபெற்ற போட்டியில் வில்லியம்ஸ் பந்துவீச்சில் சிக்ஸர் அடிப்பார். பின் வில்லியம்ஸ் செய்கையை கேலி செய்வது போன்று அவரும் செய்து காட்டுவார். இதை பார்த்த வில்லியம்ஸ் தேவையா இது நமக்கு என்பது போல்... திரும்பி செல்வார்.



    கோலியின் பழிதீர்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த டி20 போட்டி நாளை திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

     
    Published by:Vijay R
    First published:

    Tags: India vs west indies, Virat Kohli

    அடுத்த செய்தி