சர்வதேச டி20 போட்டியில் இந்திய கேப்டன்களில் அதிக ரன்கள் அடித்தவர்களில் தோனியின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கேப்டனாக 72 டி20 போட்டிகளில் 1112 ரன்கள் அடித்திருந்தார். இதுவே இந்திய கேப்டனின் அதிகபட்ச ரன்களாக இருந்தது. அந்த சாதனையை தற்போது விராட் கோலி முறியடித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி 27 பந்துகளில் 38 ரன்கள் அடித்தார். கோலி 25 ரன்களை கடந்த போது தோனியின் சாதனையை முறியடித்தார். கோலி இந்த சாதனையை 35 போட்டிகளில் முறியடித்துள்ளார். இன்றைய போட்டியின் மூலம் கோலி கேப்டனாக 1126 ரன்கள் எடுத்துள்ளார்.
Also Read : சூப்பர் ஓவரின் கடைசி 2 பந்தில் 2 சிக்சர்கள் விளாசிய ஹிட்மேன்... வைரல் வீடியோ
சர்வதேச டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா கேப்டன் டூ பிளசிஸ் 40 போட்டிகளில் 1273 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 42 டி20 போட்டிகளில் 1148 ரன்கள் உடன் அடுத்த இடத்தில் உள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.