விராட் கோலி போட்ட ட்வீட்... கோல்டன் ட்வீட்...!

#ViratKohli Tweets Recognised As Golden #Tweets | விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சுமார் 2,15,000 பேர் லைக் செய்துள்ளனர்.

news18
Updated: December 5, 2018, 5:05 PM IST
விராட் கோலி போட்ட ட்வீட்... கோல்டன் ட்வீட்...!
விராட் கோலி & அனுஷ்கா சர்மா (Twiiter/Virat Kohli)
news18
Updated: December 5, 2018, 5:05 PM IST
நடப்பாண்டில் விராட் கோலி மற்றும் சுனில் சேத்ரி ஆகியோர் பதிவிட்ட ட்வீட்கள், கோல்டன் ட்வீட்கள் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

2018-ம் ஆண்டு ட்விட்டரில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய ட்வீட்கள் மற்றும் டாப் 10 ட்ரெண்ட்ஸ் பட்டியல் வெளியாகியுள்ளது. டாப் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதல் பத்து இடங்களில் 7 இடங்களைப் பிடித்துள்ளது தென்னிந்திய சினிமா தான். இதற்கு அடுத்தபடியாக அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தருணங்கள் பட்டியலில், #IPL2018, #WhistlePodu, #AsianGames2018, #MeToo, #KeralaFloods, #JusticeforAsifa உள்ளிட்ட ஹேஷ்டேக்களும் இடம் பிடித்துள்ளன.

CSK Retentions
களத்தில் குதிக்கும் மஞ்சள் படை (CSK)


அதிகப்படியாக ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் எது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 2018 இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியின்போது, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
“இந்திய அணிக்கு ஆதரவு அளித்து அரங்கை நிரப்புமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து பதிவிட்ட வீடியோ ட்வீட்டே அதிகம் ரீட்வீட் செய்யப்பட்டிருக்கிறது.2018-ல் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட் பட்டியலில், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம். இந்த ட்வீட்டை சுமார் 2,15,000 பேர் லைக் செய்துள்ளனர்.ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட அரசியல் தலைவர்களின் டாப் 10 பட்டியலில் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க...

First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்