• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஷிகர் தவான் வேண்டும் என்று பிடிவாதம்.. தேர்வுக்குழுவுடன் வேறுபாடு: கோலி கேப்டன்சி உதறல் பின்னணி விவரம்

ஷிகர் தவான் வேண்டும் என்று பிடிவாதம்.. தேர்வுக்குழுவுடன் வேறுபாடு: கோலி கேப்டன்சி உதறல் பின்னணி விவரம்

விராத் கோலி

விராத் கோலி

விராட் கோலி தனது பேட்டிங்கை மேம்படுத்தவும், பணிச்சுமை அதிகம் இருப்பதாலும் டி20 கேப்டன்சியை உதறுவதாக தெரிவித்தாலும் பின்னணியில் இது உடனடியாக நடந்ததல்ல பல மாதங்களின், நிகழ்வுகளின் பின்னணி இருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

  • Cricketnext
  • Last Updated :
  • Share this:
    கிங் கோலி டி20 கேப்டன்சியை உதறுகிறார் என்பதை அவரது ரசிகர்களா ஜீரணிக்க முடியவில்லை, காரணம் இன்று உலக கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களிலும் 50 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்திருப்பவர் கோலி மட்டும்தான். கேப்டன்சி அவரது பேட்டிங்கை நிச்சயம் பாதிக்கவில்லை, வெளிவிவகாரங்கள்தான் அவரது இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்துக்கு எதிராக சீரியசாக ஆடாமல் இது இன்னொரு டெஸ்ட் போட்டிதான், அதுதான் இதுதான் என்றும் கடந்த கால பெருமைகளை பேசி இறுதிப்ப்போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றதும் பிசிசிஐ-யின் சில தரப்புகளுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் ஐபிஎல் கோப்பை ஒன்றைக்கூட வெல்லவில்லை என்ற விமர்சனங்களும், ஐசிசி கோப்பையையும் இன்னும் வெல்லவில்லை என்ற விமர்சனங்களும் கூட ரோகித் சர்மாவைக் கேப்டனாக்கலாம் என்று பவர் சர்க்கிளில் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    மேலும் மார்ச்சில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷிகர் தவானை அணியில் வைத்தே ஆக வேண்டும் என்று கோலி பிடிவாதம் பிடித்துள்ளார். விஜய் ஹசாரே டிராபியில் நன்றாக ஆடிய இன்னொரு வீரரை தொடக்கத்தில் களமிறக்க அணித்தேர்வுக்குழு விரும்பியதாகக் கூறப்படுகிறது, ஆனால் தேர்வுக்குழுவுடன் அதிருப்தி ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று ஷிகர் தவானுக்காக கோலி நின்றுள்ளார், புதிய வீரர் வருகையை விரும்பவில்லை. டி20-யில் தவான் தன் இடத்தை அப்போது இழந்திருந்தார்.

    Also Read: டி20 கேப்டன்சி, பேட்டிங்கில் தோனியை விஞ்சிய கோலி

    இதுபோக புதிய அணித்தேர்வுக்குழு, ரவி சாஸ்திரி போன பிறகு புதிய பயிற்சியாளர் வருகை ஆகியவற்றினாலும் கூட கோலிக்கு சவால் அதிகமாகியுள்ளது. மேலும் தோனியின் மெண்ட்டார் ரோல் டி20 உலகக்கோப்பையையும் தாண்டி நீடித்தால் அணித்தேர்வு விவகாரம் உள்ளிட்டவற்றில் தோனி தலையிடுவார் போன்ற காரணங்களும் கூறப்படுகின்றன. எனவே இந்த காரணங்களினால் தான் கோலி டி20 கேப்டன்சியை உதறியதாகத் தெரிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: