தனது ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி..!

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு  இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் வரும் 21ஆம் தேதி வெலிங்டன் மைதானத்தில் தொடங

தனது ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி..!
விராட் கோலி
  • Share this:
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ஓய்வு குறித்தும் ஓபனாக பேசி உள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நியூசிலாந்து ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 21-ம் தேதி வெலிங்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் விராட் கோலியிடம் அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, “அடுத்த 3 ஆண்டுகளுக்கு இதே உத்வேகத்துடன் தான் விளையாடுவேன். 2008ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன், வருடத்தில் 300 நாட்கள் கிரிக்கெட்டிற்காக நேரம் ஒதுக்கி கடினமான உழைப்புடன் விளையாடி வருகிறேன்.


அடுத்த 3 ஆண்டுகளுக்கு தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் தற்போது இருக்கும் இதே உத்வேகத்துடன் தன்னால் திறம்பட விளையாட முடியும் என்று பேசிய கோலி, வரவுள்ள இரண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் விளையாட அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், தன்னுடைய 34 அல்லது 35 வயதில் கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவேன்“ என்றார்.

Also Read : பாத்ரூமில் அமர்ந்து பியூஸ் சாவ்லா, பார்தீவ் பட்டேல் உடன் பாட்டு பாடி மகிழ்ந்த தோனி - வைரல் வீடியோ

மேலும் “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகரித்துள்ளது. அனைத்து அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டியில் விளையாடும் ஆர்வத்தில் உள்ளது. இந்திய அணியும் சிறப்பான ஆட்டத்தால் கோப்பையை வெல்ல முயற்சிப்போம்“ என்றார் விராட் கோலி.31 வயதான இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இதுவரை 84 டெஸ்ட், 248 ஒருநாள் மற்றும் 81 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி மொத்தம் 21,863 ரன்களை குவித்துள்ளார்.  இதுவரை 70 சதம் அடித்துள்ளார். விராட் கோலி ஓய்வு பெறுவதற்குள், சதத்தில் சதம் கண்ட நாயகன் சச்சினின் சாதனையை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருக்கின்றது.
First published: February 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்