CRICKET VIRAT KOHLI SHOULD PLAY WITH A LOT OF FREEDOM AND EXPRESS HIMSELF IN T20IS SAYS VVS LAXMAN MUT
ரோகித், பந்த், பாண்டியாவெல்லாம் இருக்கும் போது கோலி அடித்து ஆட வேண்டும், லொட்டு வைக்கக் கூடாது: விவிஎஸ். லஷ்மண்
கோலி
கோலி மட்டும் அடித்து ஆடினால் எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார் என்கிறார் லஷ்மண். கோலி ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 53 பந்துகளில் ஒருநாள் சதம் கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியை தீர்மானிக்கும் தொடர் என்று கூறும் முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ். லஷ்மண் விராட் கோலி இன்னும் அடித்து ஆட வேண்டும் என்கிறார்.
கோலி மட்டும் அடித்து ஆடினால் எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார் என்கிறார் லஷ்மண். கோலி ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 53 பந்துகளில் ஒருநாள் சதம் கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20-களில் தவணை கழற்றி விட்டு ரோஹித் சர்மாவுடன் கே.எல்.ராகுல் இறங்க வேண்டும் என்று விரும்புகிறார் லஷ்மண். இங்கிலாந்தின் ஸ்பின் பவுலிங் வேகப்பந்து வீச்சை விட பலவீனமானது என்கிறார் லஷ்மண்.
ஆனால் இங்கிலாந்து பவுலிங்கை விட பேட்டிங் அபாயகரமானது என்பதை லஷ்மண் குறிப்பிட மறந்து விட்டார்.
“விராட் கோலி ஒரு பிரமாதமான ஒரு உயர்தர பேட்ஸ்மன், தனித்துவ திறமை படைத்தவர். அதனால் அவர் இறங்கி தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும், தான் ஒரு ஸ்ட்ரோக் பிளேயர் என்பது அவருக்குத் தெரியும் எனவே லொட்டு வைத்து ஒரு முனையை தாங்கிப் பிடிக்க வேண்டியதெல்லாம் இல்லை.
அவர் மட்டும் அதிக ஸ்ட்ரோக்குகளை ஆடினால் அவர்தான் மேட்ச் வின்னர்.
ரோகித் சர்மா, ராகுல் தொடக்கத்தில் இறங்கினால் ஷ்ரேயஸ் அய்யர், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் ஆகிய அதிரடி வீரர்கள் உள்ளனர். எனவே விராட் கோலி ஆக்ரோஷமாக ஆட வேண்டும். அப்படியாடினால் அவர் ஒரு அபாயகரமான வீரராகத் திகழ்வார்.
அதே போல் மறந்து போன பவுலர் புவனேஷ்வர் குமார் உலகக்கோப்பை டி20-யில் நிச்சயம் அவரது அனுபவம் உலகக்கோப்பையில் கைகொடுக்கும். எனவே அவர் காயத்திலிருந்து மீண்டது ஒரு நல்ல அறிகுறியாகப் பார்க்கிறேன். ஒரு வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணிக்கு நன்றாக நிறைய போட்டிகளில் ஆடி வென்று கொடுத்திருக்கிறார் எனவே அவரை ஒதுக்குதல் கூடாது,
என்றார் விவிஎஸ் லஷ்மண்.
மார்ச் 12ம் தேதி முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. இதற்கான அணியில் நடராஜன் சந்தேகமாகியுள்ளார், வருண் சக்ரவர்த்தி உடல் தகுதி சோதனையில் தோல்வியடைந்ததால் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.