CRICKET VIRAT KOHLI SHARES HIS THOUGHTS ON SURPASSING MS DHONI S CAPTAINCY RECORD MUT
தோனி சாதனையை உடைப்பதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை: விராட் கோலி திட்டவட்டம்
விராட் கோலி எம்.எஸ் தோனி
அகமதாபாத்தில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியிலும் கோலி தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றால் உள்நாட்டில் கோலியின் வெற்றி எண்ணிக்கை 22 என்று ஆகி தோனி சாதனையை முறியடிப்பார். இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.
இந்தியாவில் அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற கேப்டன்களில் தோனியுடன் தற்போது விராட் கோலி சமநிலை வகிக்கிறார். இன்று பகலிரவு ஆட்டமாகத் தொடங்கும் அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் வென்றால் தோனி சாதனையை விராட் கோலி கடந்து விடுவார்.
ஆனால் தனக்கு அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை, நான் என் கடைமையைத்தானே செய்கிறேன் என்று அடக்கி வாசித்துள்ளார் விராட் கோலி.
“ஒரு கேப்டனாக எனக்கு சாதனைகள் எல்லாம் ஒன்றும் இல்லை. எனக்கு ஒரு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது அதை சிறப்புற செய்ய வேண்டும் என்பதே விருப்பம். இப்படித்தான் இப்போதும் இருக்கிறேன், எப்போதும் இருப்பேன்.
நான் விளையாடும் வரை இப்படித்தான் யோசிப்பேன். வெளியிலிருந்து பார்க்கத்தான் இந்தச் சாதனையெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியும் எனக்கு இது சாதாரணம்தான். ஒரு மேட்டரே அல்ல.
நானும் தோனியும் பெரிய தோழமையுடன் இருந்திருக்கிறோம், இருந்து வருகிறோம். பரஸ்பர மரியாதை என்பது நம் இதயத்தில் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாப்பதாகும்.
இதுதான் முக்கியமே தவிர மைல்கல்கள் ஒன்றுமில்லை. டீம் இந்தியாவை டாப்-ல் கொண்டு செல்ல எனக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனக்குப் பிறகு கேப்டனாக வருபவருக்கும் இது பொருந்தும்.
இங்கிலாந்துக்கு எதிராக 2 போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்பதற்காகவே ஆடுவோம், இதில் வென்று விட்டு அடுத்த போட்டியை டிரா செய்யும் எண்ணமெல்லாம் இல்லை. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்றால் போதும் என்பதற்காக மட்டும் ஆடுவதில்லை. 2 போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்பதுதான் எண்ணம்.
எதிர்காலம் பற்றி ரொம்பவும் பேச முடியாது. என்ன நடக்கும் என்பது அடுத்தவர்களின் கற்பனைக்கு விட்டு விடுவோம்.” என்றார் விராட் கோலி.
இன்று அகமதாபாதில் பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட் நடைபெறுகிறது. தோனி இந்தியாவில் தன் கேப்டன்சியில் 21 டெஸ்ட்களில் வென்றுள்ளார். சென்னை டெஸ்ட் வெற்றி மூலம் கோலி அதனை சமன் செய்தார்.
இந்நிலையில் அகமதாபாத்தில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியிலும் கோலி தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றால் உள்நாட்டில் கோலியின் வெற்றி எண்ணிக்கை 22 என்று ஆகி தோனி சாதனையை முறியடிப்பார். இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.