Home /News /sports /

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி.. 'அதிகரிக்கும் அழுத்தம் எஞ்சாய் செய்வதற்கே' - கோலி

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி.. 'அதிகரிக்கும் அழுத்தம் எஞ்சாய் செய்வதற்கே' - கோலி

பாகிஸ்தான் போட்டி குறித்து விராட் கோலி.

பாகிஸ்தான் போட்டி குறித்து விராட் கோலி.

விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் எப்படி விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Internationa, IndiaDubai
    ஆசியக்கோப்பை போட்டித் தொடரில் நடக்கும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். வெல்ல வேண்டும் என்ற கட்டாயம் இரு நாட்டு அணிகளுக்கும் ஏற்படும் இது விளையாடும் வீரர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும்.

    இன்று நடைபெறும் இப்போட்டியில் 10 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. கடைசியாக இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியுற்றது. இதனால் இப்போட்டியின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலி கருத்துத் தெரிவித்துள்ளார். ஒரு வீரராக நாம் களத்தில் இறங்கும்போது இப்போட்டி மற்றொரு போட்டி அவ்வளவே என அவர் தெரிவித்துள்ளார்.

    “நீங்கள் களத்தில் இறங்கும்வரை வெளியில் இருக்கும் சூழல் உங்களை கண்டிப்பாக உள் இழுக்கும். அது நீங்கள் அனுபவிப்பதற்காக. உங்களை ஆர்வமூட்டுவதற்காக. ஆனால் களத்தில் இறங்கியவுடன் அது எல்லா போட்டிகளையும் போல் ஒரு சாதாரணப் போட்டிதான்” என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Asia cup, Asian cup cricket

    அடுத்த செய்தி