நான் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை: கோலி ஆவேசம்!

I Do Not Need To Prove Anything To Anyone: #ViratKolhi | கடந்த முறை, ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது 4 சதங்களுடன் 692 ரன்களை கோலி குவித்திருந்தார். #INDvAUS

நான் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை: கோலி ஆவேசம்!
விராட் கோலி (Twitter/BCCI)
  • News18
  • Last Updated: December 3, 2018, 1:19 PM IST
  • Share this:
யாருக்காகவும் எதையும் நிரூக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடந்துமுடிந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பா் 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

Indian Cricket Team
இந்திய கிரிக்கெட் அணி (BCCI)டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள வானொலி ஒன்றுக்கு கோலி பேட்டி அளித்தார். அதில், “ஒவ்வொரு தொடரில் இருந்தும், போட்டியில் இருந்தும் நிறைய கற்றுக் கொள்வோம். கடந்த 4 ஆண்டுகள் காலத்தை பார்க்கும்போது, இந்த முறை வெல்ல முடியும் என்பதில், நான் உறுதியுடன் இருக்கிறேன். ஆனால், யாருக்கும் எதையும் நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார்.

மேலும், “என்னை பொறுத்தவரை அணிக்கு என்ன தேவையோ அதை நான் செய்ய வேண்டும். அதற்காக 100 சதவீதம் களத்தில் என்னுடைய பங்களிப்பை அளிக்க வேண்டும். எனக்கு பல நாடுகளுக்கு சென்று ஆடுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை” என கோலி தெரிவித்தார்.

Virat Kohli
கேப்டன் விராட் கோலி (BCCI)
கோலி, நடப்பாண்டு டெஸ்ட் போட்டிகளில் கணிசமான ரன்களைக் குவித்துள்ளார். கடந்த முறை, ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, 4 சதங்களுடன் 692 ரன்களை அவர் குவித்திருந்தார். அவரது சராசரி ரன் விகிதம் 86.50 ஆக உள்ளது. அதேபோல், இந்த டெஸ்ட் தொடரிலும் அதிக அளவில் ரன்களைக் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

Also Watch...

First published: December 3, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்