ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உங்களுக்குத்தான் ரெஸ்ட் தேவை.. பிஸினஸ் க்ளாஸை பவுலர்களுக்கு விட்டுக்கொடுத்த விராட் கோலி, ரோகித்! குவியும் பாராட்டுகள்!

உங்களுக்குத்தான் ரெஸ்ட் தேவை.. பிஸினஸ் க்ளாஸை பவுலர்களுக்கு விட்டுக்கொடுத்த விராட் கோலி, ரோகித்! குவியும் பாராட்டுகள்!

விராட் கோலி, ரோஹித் ஷர்மா

விராட் கோலி, ரோஹித் ஷர்மா

ஐசிசி விதிகளின் படி ஒவ்வொரு அணியிலும் 4 வீரர்கள் மட்டுமே நவீன வசதிகள் கொண்ட பிசினஸ் கிளாஸ் வகுப்பு வழங்கப்படும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaAustraliaAustralia

  ஆஸ்திரேலியா மெல்போர்னில் இருந்து அடிலெய்டுக்கு விமான மூலம் பயணம் செய்தபோது, விராட், ரோஹித், ராகுல் டிராவிட் ஆகியோர் தங்கள் பிசினஸ் கிளாஸ் சீட்டுகள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விட்டுக்கொடுத்தனர்.

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நிறைவடையவுள்ளன. இன்று நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டி நடைபெற்ற வருகிறது. நாளை நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போடியில் போட்டியிடும்.

  ஐசிசி விதிகளின் படி ஒவ்வொரு அணியிலும் 4 வீரர்கள் மட்டுமே நவீன வசதிகள் கொண்ட பிசினஸ் கிளாஸ் வகுப்பு வழங்கப்படும். இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் வழங்கப்பட்டது.

  மற்ற வீரர்கள் சதாரண வகுப்பில் பயணிப்பார்கள். இதனால் அவர்களுக்கு சரியான ஓய்வு கிட்டாமல் போகும். வேக பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஓய்வு தேவை என்பதால், அவர்களுக்காக விராட், ரோஹித், ராகுல் மூவரும் தங்கள் பிசினஸ் கிளாஸ் இருக்கையை விட்டுக்கொடுத்தனர்.

  என்னாச்சு ரோஹித் சர்மாவிற்கு..? அரையிறுதி போட்டிக்கு முன் காயம் (news18.com)

  மெல்போர்னில் இருந்து அடிலெய்டுக்கு விமான மூலம் பயணித்தால் 1 மணி 20 நிமிடங்கள் ஆகும். இதனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு தேவையான ஓய்வு கிடைக்கும் வகையில் அவர்களை பிசினஸ் கிளாஸ் வகுப்பில் பயணிக்க வைத்தனர்.

  இந்த செயல் ஒரு வகையான யுக்தியாக கையாளப்பட்டாலும் இந்திய அணியின் ஒற்றுமையை சமூகவலைதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Rohit sharma, T20 World Cup, Virat Kohli