Home /News /sports /

விராட் கோலியை கொண்டு வரத்தான் இத்தனை பரிசோதனைகளா?-மீண்டும் சஞ்சு சாம்சன் பரிதாபம்

விராட் கோலியை கொண்டு வரத்தான் இத்தனை பரிசோதனைகளா?-மீண்டும் சஞ்சு சாம்சன் பரிதாபம்

பார்மில் இல்லாத விராட் கோலி மீண்டும் இந்திய அணியில்

பார்மில் இல்லாத விராட் கோலி மீண்டும் இந்திய அணியில்

பார்மிலும் இல்லை, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வும் எடுத்துக் கொள்கிறார், ஆனால் ஆசியக் கோப்பைக்கான அணியில் மீண்டும் இடம்பெற்றார் விராட் கோலி, நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் ‘கிஃப்டட்’ பேட்டர் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் கதவு தாளிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    விராட் கோலியை கொண்டு வரத்தான் இத்தனை பரிசோதனைகளா?-மீண்டும் சஞ்சு சாம்சன் பரிதாபம்
    பார்மிலும் இல்லை, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வும் எடுத்துக் கொள்கிறார், ஆனால் ஆசியக் கோப்பைக்கான அணியில் மீண்டும் இடம்பெற்றார் விராட் கோலி, நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் ‘கிஃப்டட்’ பேட்டர் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் கதவு தாளிடப்பட்டுள்ளது.

    போட்டிக்குப் போட்டி ஆட்களை மாற்றிக் கொண்டு, தொடக்க வீரர்களை மாற்றிக்கொண்டிருந்ததன் தாத்பரியம் என்னவெனில் உயர் ஸ்பான்சர் வீரர்களான அதி வர்த்தக வீரர்களான கே.எல்.ராகுல், விராட் கோலியை அணிக்குள் கொண்டு வரத்தான். இவர்களுக்காக அணியின் வீரர்களை பாடாய்ப்படுத்தி ஒரு மேட்ச் எடுப்பது, ஒரு மேட்ச் உட்கார வைப்பது, 4ம் நிலையில் இறங்கி இங்கிலாந்தில் திகைப்பூட்டும் உலகின் தலைசிறந்த டி20 சதங்களில் ஒன்றை அடித்த சூரியகுமார் யாதவ் டி20-யில் ஓப்பனிங்கில் இறக்கிவிடப்பட்டு அவர் பேட்டிங்கை காலி செய்யப் பார்க்கிறார்கள்.

    ரிஷப் பண்ட்டை ஓப்பனிங் இறக்கிப் பார்த்தார்கள். கேட்டால் உலகக்கோப்பைக்கான சிறந்த அணிச்சேர்க்கையை உருவாக்குகிறோம் என்றார்கள். இப்படித்தான் ராகுல் திராவிட் கேப்டனாக இருந்த போது கிரெக் சாப்பல் பயிற்சியாளராக இருந்த போது பெரிய தவறுகளைச் செய்து மே.இ.தீவுகளில் நடைபெற்ற 2007 ஐசிசி உலகக்கோப்பையில் வங்கதேசத்திடமும், இலங்கையிடமும் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறினோம்.

    ஆனால் அப்போது உண்மையில் சீனியர் வீரர்களின் ஆதிக்கத்தை ஒழிக்கப்பார்த்து உண்மையில் இளம் வீரர்களுக்கான வாய்ப்பை உருவாக்கி கையைச் சுட்டுக்கொண்டார் கிரெக் சாப்பல், இப்போது மாறாக  சீனியர் வீரர்களுக்காக இளம் வீரர்களின் கிரிக்கெட் கரியர் காலி செய்யப்பட்டு வருகிறது. இப்போது ஆசியக் கோப்பை அணியில் சஞ்சு சாம்சன் இல்லை, அவர் என்ன செய்தார் பாவம்! சான்ஸ் கொடுத்த போதெல்லாம் முதலில் சொதப்பினாலும் சமீபமாக பிரமாதமாக ஆடி வருகிறார், ஆனால் அவருக்கு கதவுகள் தாளிடப்பட்டு விட்டன.

    வீரர்களை மாற்றி மாற்றி அணியை மேட்சுக்கு மேட்ச் கோலி மாற்றிய போது விமர்சனம் செய்யப்பட்டது, ஆனால் இப்போது மும்பை லாபி ரோஹித் சர்மா செய்யும் போது கேள்வி கேட்பாரில்லை. அணியைக் கட்டமைக்கிறோம் என்பதெல்லாம் சும்மா பம்மாத்துதான், உயர் ஸ்பான்சர், அதி வர்த்தக வீரர்களான ராகுல், கோலியை மீண்டும் அணியில் கொண்டு வரத்தான் அனைவருக்கும் வாய்ப்பு என்று கட்டுக்கதை பேசப்பட்டது என்பது இப்போது தெளிவாகியுள்ளது. உண்மையில் விராட் கோலி டி20 அணியில் இடம்பெற என்ன செய்து விட்டார்?

    டி20 உலகக்கோப்பைக்குப் பிறகே விராட் கோலி 4 டி20 போட்டிகளில்தான் ஆடியுள்ளார். 19 போட்டிகளில் வரவில்லை என்று ஒதுங்கிக் கொண்டுள்ளார். இந்த 4 போட்டிகளிலும் கோலி 81 ரன்களைத்தான் எடுத்துள்ளார். சராசரி 20. ஆர்சிபிக்கு கடந்த ஐபிஎல் 2022 தொடரில் ஆடிய போது கோலியின் சராசரி 22.73, ஸ்ட்ரைக் ரேட் 116 ஆக சரிவு கண்டது. இங்கிலாந்தில் சமீப டி20 தொடரில் 2 போட்டிகளில் 1, 11 என்று சொதப்பலோ சொதப்பல்.
    அக்சர் படேல் இன்னொரு லாபி பிளேயர் அவர் ஆசியக் கோப்பைக்கான ஸ்டாண்ட் பை வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

    ஜடேஜா என்ன செய்து விட்டார் என்று அவருக்கு இடம் என்று கடவுளுக்குத்தான் வெளிச்சம். இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் விரட்டி விடப்பட்டுள்ளனர். இதில் மிக மிகப் பரிதாபம் சஞ்சு சாம்சன். கொஞ்சம் பரிதாபம் குல்தீப் யாதவ். ஏனெனில் அனில் கும்ப்ளே குல்தீப் யாதவ்வை பெரிய பவுலராகக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தார், விராட் கோலி குல்தீப் யாதவ்வை ஒழித்து ஒரு நல்ல டெஸ்ட் பவுலர் என்று வளர வேண்டிய குல்தீப்பின் கரியரை காலி செய்தார்.  குல்தீப் போன்ற ஒரு பவுலர் அன்று எட்ஜ்பாஸ்டனில் இருந்திருந்தால் இங்கிலாந்து 377 ரன்களை அதிரடியாக சேஸ் செய்து வென்றிருக்குமா என்பது கேள்வியே.

    ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி வருமாறு: 

    ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அஸ்வின், செஹல், பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான்.

    ஸ்டாண்ட் பை வீரர்கள்: அக்சர் படேல், ஷ்ரேயஸ் அய்யர், தீபக் சாஹர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Asia cup cricket, Kl rahul, Sanju Samson, T20, Virat Kohli

    அடுத்த செய்தி