கொட்டிய வருமானம் - 100 வீரர்களில் விராட் கோலிக்கு என்ன இடம் தெரியுமா?

பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் 2020-ம் ஆண்டிற்கான அதிகம் வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கொட்டிய வருமானம் - 100 வீரர்களில் விராட் கோலிக்கு என்ன இடம் தெரியுமா?
விராட் கோலி
  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் இதழ் உலகில் அதிகம் வருவாய் ஈட்டிய வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஜூன் 2019 முதல் ஜூன் 2020 காலகட்டத்தில் வீரர்களின் சம்பளம், விளம்பர ஒப்பந்த கட்டணம், போனஸ், ராயல்டி ஆகியவை மூலம் வரும் வருவாயை கணக்கிட்டு முதல் 100 வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

விராட் கோலி கடந்த ஆண்டு சம்பளமாக 25 கோடி ரூபாயும் ($2 மில்லியன்) விளம்பர ஒப்பந்தம் மூலம் 171 கோடி ($24 மில்லியன்) ரூபாயும் வருவாய் ஈட்டியுள்ளார். இதன் மூலம் கடந்த ஆண்டு 100 வது இடத்தில் இருந்த விராட் கோலி இந்தாண்டு 66 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த ஆண்டு மட்டும் 196 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் விராட் கோலி. தற்போதைய பட்டியலில் இருக்கும் 100 வீரர்களில் கோலி மட்டுமே கிரிக்கெட் வீரர் என்பது கூடுதல் சிறப்பு

சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி மட்டுமே இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். நம்பர் ஒன் இடத்தை டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் தட்டிச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு மட்டும் ஃபெடரர் 803 கோடி ரூபாய் ($106.3 மில்லியன்) வருவாய் ஈட்டியுள்ளார்.


கடந்த ஆண்டு 5 வது இடத்தில் இருந்த ஃபெடரர் இந்த ஆண்டு முதல் இடத்தை கைப்பற்றியுள்ளார். கடந்த  30 ஆண்டுகளில் டென்னிஸ் வீரர் முதல் முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளார் . கொரோனோ அச்சுறுத்தலால் குழு விளையாட்டு போட்டி வீரர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதால், டென்னிஸ் வீரர் ஒருவர் முதல் இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த கால்பந்து வீரர் மெஸ்ஸி 786 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மற்றொரு கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ 793 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளார்.

வீராங்கனையை பொருத்தவரை 100 இடங்களில் இரண்டு பேர் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். ஜப்பான் வீராங்கனை ஒஷாகா 29-வது இடத்தையும், அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் 33-வது இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Also see...

சமூகப் பரவல் ஏற்படாத நிலையை உருவாக்க அரசு பாடுபட்டு வருகிறது - அமைச்சர் விஜய பாஸ்கர்
First published: May 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading