விளையாட்டு

  • associate partner
Home » News » Sports » CRICKET VIRAT KOHLI REACTS AFTER RCB REMOVE PICTURE AND NAME ON SOCIAL MEDIA VJR

ஆர்.சி.பி பெயர் மாற்றம்..? ட்விட்டரில் கோலி ஆதங்கம்..! நடப்பது என்ன..?

ஆர்.சி.பி பெயர் மாற்றம்..? ட்விட்டரில் கோலி ஆதங்கம்..! நடப்பது என்ன..?
விராட் கோலி
  • News18 Tamil
  • Last Updated: February 14, 2020, 10:13 AM IST
  • Share this:
ஆர்.சி.பி அணியின் அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து பழைய பதிவுகள் அழிக்கப்பட்டும், புரொபைல் போட்டோ நீக்கப்பட்டும் உள்ளதால் குழப்பமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி பலம் வாய்ந்த அணியாக இருந்த போதும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத சோகம் தொடர்கதையாகவே உள்ளது. ரன்மெஷின், சேஷிங் நாயகன், வெற்றி கேப்டனாக உலாவரும் விராட் கோலிக்கு ஐபிஎல் மட்டும் எட்டாக் கனியாக உள்ளது.

நடப்பு தொடரில் எப்படியாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்பதற்காக ஆர்.சி.பி வீரர்கள் தற்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் ஆர்.சி.பி அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்த பழைய பதிவுகள் மற்றும் புரொபைல் போட்டோ நீக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியளிந்த அந்த அணியின் சாஹல், ஆர்.சி.பி, சமூக வலைதளப் பக்கங்களில் இருந்த படங்கள் எங்கே? என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.


அதை தொடர்ந்து விரைவில் மீண்டும் சிறப்பான இணையதளத்துடன் வருகிறோம். அதுவரை ரசிகர்கள் காத்திருங்கள் என்று ஆர்.சி.பி சமூகவலைதளம் விளக்கம் அளித்திருந்தது. இது தொடர்பாக இந்திய அணி மற்றும் ஆர்.சி.பி அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில், பதிவுகள் நீக்கப்பட்டதுள்ளது. அணியின் கேப்டனாக எனக்கு எந்த தகவலும் தரப்படவில்லை. உங்களுக்கு எதாவது வேண்டுமென்றால் தெரியப்படுத்துங்கள்“ என்றுள்ளார்.ஆர்.சி.பி-யின் இந்த நடவடிக்கைகளுக்கு காரணம் ஸ்பான்சர் மற்றும் பெயர் மாற்றமே என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நடப்பு தொடருக்கு ஆர்.சி.பி அணியின் டைட்டில் ஸ்பான்சாராக முத்தூட் ஃபின்காரப் நிறுவனம் ஒப்பந்தமாகி உள்ளது. இதன் காரணமாக பதிவுகள் நீக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் பெங்களூர் பெயரை பெங்களூரூ என மாற்றியபின்னும் ஆர்.சி.பி பெங்களூர் என்றே தனது பெயரில் வைத்துள்ளது. இதன் காரணமாக இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ என்று பெயர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading