Home /News /sports /

அந்த ஓவர்ல 6 சிக்ஸ் அடிச்சிருப்பியா? சூரியகுமாரிடம் கேட்ட கோலி - வீடியோ

அந்த ஓவர்ல 6 சிக்ஸ் அடிச்சிருப்பியா? சூரியகுமாரிடம் கேட்ட கோலி - வீடியோ

சூர்ய குமார் யாதவ், விராட் கோலி

சூர்ய குமார் யாதவ், விராட் கோலி

“என்னால் இயன்றதை முயன்றேன், ஆனால் யுவராஜ் சிங் சாதனையை நாம் கடக்கக் கூடாது என்றும் தோன்றியது. இதைச் சொன்னவுடன் இருவரும் மனம் விட்டுச் சிரித்தனர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    ஹாங்காங் அணிக்கு எதிராக சூரியகுமார் யாதவ் திகைப்பூட்டும் அதிரடியைக் காட்டி 26 பந்துகளில் 68 ரன்களை விளாசித் தள்ளினார். மைதானத்தின் சகலபகுதிகளிலும் பந்துகளைப் பறக்கவிட்டார். கிரீசை ஏ.பி.டிவில்லியர்ஸ் போல் பயன்படுத்தி இன்னொரு 360 டிகிரி வீரராக உருவெடுத்துள்ளார் சூரியகுமார் யாதவ். அன்று விராட் கோலியே இவரது ஷாட்களைப் பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்தார்,

    மேலும் அவருக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்தினார். கடைசி ஓவரில் முதல் 3 பந்துகளை அவர் சிக்சருக்கு அனுப்ப, சரி! இந்த ஓவரில் 6 சிக்ஸ் உண்டு என்று எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்திருப்பார்கள். யுவராஜ் சிங்கிற்குப் பிறகு 6 சிக்ஸ் அடித்த இந்திய வீரர் சூரியகுமார் என்று எதிர்பார்த்தோம்.  ஆனால் 4-வது பந்தில் அவர் பீட்டன் ஆனார், பிறகு இன்னொரு சிக்ஸ், பிறகு 2 ரன்கள் என்று அந்த ஓவரில் 26 ரன்கள் அடித்தார் சூரியகுமார் யாதவ். இந்த ஹாங்காங் போட்டிக்குப் பிறகு பிசிசிஐ.டிவி சார்பாக சூரியகுமார் யாதவ்வும் விராட் கோலியும் வீடியோ உரையாடல் மேற்கொண்டனர்:



    அப்போது விராட் கோலி, என்ன கடைசி ஓவரில் 6 சிக்சர்களை முயற்சி செய்தாயா? என்று கேட்க அதற்கு சூரியகுமார் யாதவ், “என்னால் இயன்றதை முயன்றேன், ஆனால் யுவராஜ் சிங் சாதனையை நாம் கடக்கக் கூடாது என்றும் தோன்றியது. இதைச் சொன்னவுடன் இருவரும் மனம் விட்டுச் சிரித்தனர்.

    இதையும் வாசிக்க: ஹர்திக் பாண்டியாதான் அடுத்த தோனி, விரைவில் கேப்டனாவார் - ஹர்பஜன் சிங்

    அதன் பிறகு யுவராஜ் சிங்கின் 6 சிக்சர்கள் உண்மையில் பிரமிக்க வைக்கும் சாதனை என்றார்.  “அது ஒரு மாயஜாலமே. அதுவும் குறிப்பாக ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சுக்கு எதிராக. உண்மையில் பிரமிப்பூட்டும் ஷாட்கள்” என்றார் விராட் கோலி.  செப்டம்பர் 4ம் தேதி ஆசியக் கோப்பையில் இந்திய அணி குரூப் ஏ-ல் அடுத்து தகுதி பெறும் அணியுடன் சூப்பர் 4 சுற்றில் மோதுகிறது. இதுவரை சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் தகுதி பெற்றுள்ளன.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Asia cup, Virat Kohli, Yuvaraj Singh

    அடுத்த செய்தி