சிட்னியில் நிரந்தர கவுரவ உறுப்பினர்களான கோலி, ரவி சாஸ்திரி!

#Kohli, #RaviShastri receive honorary membership | இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (ஜன.12) தொடங்க உள்ளது. #AUSvIND #SydneyCricketGround

news18
Updated: January 11, 2019, 8:04 PM IST
சிட்னியில் நிரந்தர கவுரவ உறுப்பினர்களான கோலி, ரவி சாஸ்திரி!
நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெற்ற ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி. (Twitter/Ravi Shastri)
news18
Updated: January 11, 2019, 8:04 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருக்கு சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் நிரந்தர கவுரவ உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

அண்மையில், நடந்து முடிந்த 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது.

Indian cricket team, இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது. (Image: AP)


இதனை அடுத்து, இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (ஜன.12) தொடங்க உள்ளது. ஒருநாள் தொடருக்கு தயாராவதற்காக இந்திய அணி வீரர்கள் சிட்னி மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

Indian Team Practice, இந்திய அணி வலைப்பயிற்சி
அனல் பறக்கும் வலைப்பயிற்சியில் இந்திய வீரர்கள். (BCCI)


முன்னதாக, சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் நிரந்த கவுரவ உறுப்பினர் அந்தஸ்து, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது தனக்கு மிகப் பெரிய கவுரவம் என ரவி சாஸ்திரி ட்விட்டரில் தெரிவித்தார்.
Loading...சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாரா ஆகியோருக்குப்பிறகு, சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் நிரந்த கவுரவ உறுப்பினர் அந்தஸ்து பெற்ற வெளிநாட்டினர் விராட் கோலியும், ரவி சாஸ்திரியும் தான்.

Photos: அனல் பறக்கும் வலைப்பயிற்சியில் இந்திய அணி!

Also Watch...

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...