கில்லி விஜயாக மாறிய கிங் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்று தேசிய கீதம் பாடி போட்டியைத் தொடக்கி வைத்தார்.

Web Desk | news18
Updated: July 28, 2019, 5:31 PM IST
கில்லி விஜயாக மாறிய கிங் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்று தேசிய கீதம் பாடி போட்டியைத் தொடக்கி வைத்தார்.
Web Desk | news18
Updated: July 28, 2019, 5:31 PM IST
7-வது புரோ கபடி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.

புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்றப் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. சமபலத்துடன் மோதிய இருஅணிகளும் சரிக்கு சமமாக புள்ளிகளைக் குவித்து வந்தது. இறுதியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர் அணி 27 - 25 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்று தேசிய கீதம் பாடி போட்டியைத் தொடக்கி வைத்தார். மேலும் கபடி வீரர் போல் தொடையை தட்டி ரசிகர்களையும், வீரர்களையும் உற்சாகப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் விராட் கோலி பேசுகையில், “உலக அளவில் கபடி போட்டியில் இந்திய அணி சிறந்து விளங்குகிறது. புரோ கபடி தொடர் ஆரம்பித்தது முதல் கபடி போட்டியின் மீதான கவனம் அதிகமாகி உள்ளது.உலக அளவில் கபடி போட்டி அங்கீகாரம் பெற்ற விளையாட்டாக மாற இந்திய வீரர்களின் மனஉறுதியும், உடல்தகுதியும் தான் காரணம்" என்றார்.

Also Watch

First published: July 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...