பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு விராட் கோலி தனது ஜெர்ஸியை பரிசாக அளித்தார். இதுதொடர்பான வீடியோ ஒன்று விராட் கோலி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 4 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற கடைசி மற்றும் 4 ஆவது போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா 180 ரன்களும், விராட் கோலி 184 ரன்களும் எடுத்தனர். தொடரை இந்திய அணி வென்ற நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உஸ்மான் கவாஜா மாற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோருக்கு விராட் கோலி தனது ஜெர்சியை பரிசளித்தார். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
King Kohli 👑 had some memorabilia to give to his Australian teammates post the final Test 👏🏼👏🏼
Gestures like these 🫶🏼#TeamIndia | #INDvAUS pic.twitter.com/inWCO8IOpe
— BCCI (@BCCI) March 13, 2023
டெஸ்ட் தொடரையடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் வெள்ளியன்று தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஒருநாள் தொடரையடுத்து ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 31 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket