• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Virat Kohli | இப்படித்தான் ‘ஒர்க்-அவுட்’ செய்கிறார் விராட் கோலி- வீடியோ

Virat Kohli | இப்படித்தான் ‘ஒர்க்-அவுட்’ செய்கிறார் விராட் கோலி- வீடியோ

விராட் கோலி.

விராட் கோலி.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் விராட் கோலி பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டதைப் பார்க்க முடிந்தது.

  • Share this:
    இங்கிலாந்து ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்ட 3 வீரர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டாலும், உடற்பயிற்சியில் கண்டிப்பான இந்திய கேப்டன் விராட் கோலி கடுமையாக உடல் பயிற்சியில் இருந்து வருகிறார்.

    இது தொடர்பாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் விராட் கோலி பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டதைப் பார்க்க முடிந்தது.



     




    View this post on Instagram





     

    A post shared by Virat Kohli (@virat.kohli)






    இந்திய வீரர்களுக்கு ஜூலை 7 மற்றும் 9ம் தேதிகளில் கோவிட்-19 தடுப்பூசி 2ம் தவணை செலுத்தப்படுகிறது. இங்கிலாந்துக்கு செல்லும் முன் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்.

    இங்கிலாந்தில் கொரோனா டெல்டா வேரியண்ட் தாக்கம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக வியாழனன்று தொடங்கும் ஒரு நாள் தொடருக்காகத் தேர்வு செய்யப்பட்ட இங்கிலாந்து அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ், இதனையடுத்து முழு அணியும் குவாரண்டைனுக்குச் செல்ல பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புத்தம் புதிய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    Also Read: MSDhoni| ‘ஹேப்பி பர்த் டே கேப்டன் கூல் தோனி..’ - ட்விட்டரில் தெறிக்கவிடும் தோனி ஆர்மி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் இந்திய அணி ஜூலை 14ம் தேதி லண்டனில் ஒன்று கூடி துர்ஹாமில் 2 வார பயிற்சிக்காக புறப்படுகின்றனர். அங்குதான் செலக்ட் கவுண்டி லெவன் என்ற சொத்தை அணியுடன் பயிற்சி ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாட்டிங்காமில் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்குகிறது. 2014-ல் பேட்டிங்கில் சொதப்பி ஆண்டர்சனின் செல்லப்பிள்ளையான விராட் கோலி 2018-ல் 2 சதங்கள் 3 அரைசதங்களுடன் 593 ரன்களை எடுத்து ஒரு முறை கூட ஆண்டர்சனிடம் அவுட் ஆகாமல் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டினாலும் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: