ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

’பயங்கரமான விராட் வெறியரா இருப்பாரோ’ - கோலியின் உருவத்தை மணலில் வரைந்த பாகிஸ்தான் ரசிகரின் வீடியோ வைரல்...

’பயங்கரமான விராட் வெறியரா இருப்பாரோ’ - கோலியின் உருவத்தை மணலில் வரைந்த பாகிஸ்தான் ரசிகரின் வீடியோ வைரல்...

விராட் கோலியின் உருவத்தை வரைந்த பாகிஸ்தான் ரசிகர்

விராட் கோலியின் உருவத்தை வரைந்த பாகிஸ்தான் ரசிகர்

பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்த விராட் கோலி ரசிகர் ஒருவர் அவரது உருவத்தை மணலில் வரைந்து கோலிக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விராட் கோலியின் தீவிர பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் கோலியின் உருவத்தை மணலில் வரைந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு புகழ் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் கோலிக்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டாமே இருக்கிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில் இந்தியாவை வெற்றி பெறச் செய்த விராட் கோலிக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்து குவிந்த வண்ணம் இருக்கிறது.

  மெல்பர்னில் நடைபெற்ற சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  31 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்களை இழந்து இந்திய அணி தத்தளித்தது. அப்போது 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலியும் ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். குறிப்பாக விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

  இதையும் படிங்க: பிடித்த ஜெர்ஸி நம்பர் என்ன? சிஎஸ்கே அணிக்கு சுரேஷ் ரெய்னா அளித்த நச் பதில்!

  இது மட்டும் இல்லாமல் தனி ஒரு ஆளாக பாகிஸ்தான் அணியை தோல்வியடைய வைத்த விராட் கோலியை பாகிஸ்தான் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

  இந்த நிலையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்த விராட் கோலி ரசிகர் ஒருவர், அவரது உருவத்தை மணலில் வரைந்து கோலிக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

  சமீர் என்ற ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ”டியர் விராட் கோலி நான் உங்களது மிகப்பெரிய ரசிகன்” என அந்த வீடியோ எடுத்து தனது சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் விராட் கோலிக்கு மணல் உருவத்தை வரைந்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: India vs Pakistan, Virat Kohli