Home /News /sports /

ஒரு பெரிய இன்னிங்ஸ்தான் எல்லோரும் வாயை மூடிக்கொள்வார்கள் - கோலிக்கு கொடிபிடிக்கும் ரவி சாஸ்திரி

ஒரு பெரிய இன்னிங்ஸ்தான் எல்லோரும் வாயை மூடிக்கொள்வார்கள் - கோலிக்கு கொடிபிடிக்கும் ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி - விராட் கோலி

ரவி சாஸ்திரி - விராட் கோலி

Virat Kohli : கோலி ஒரு எந்திரம், அவர் நிச்சயம் பார்முக்கு வந்து விடுவார். அவருக்கு இருக்கும் ரன் பசியும் கிரிக்கெட் மீதான ஆர்வமும் நம்ப முடியாதது - ரவி சாஸ்திரி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்ப ஒரே ஒரு பெரிய இன்னிங்ஸ் மட்டுமே தேவை என்றும், அந்த பெரிய இன்னிங்ஸ் ஆடிவிட்டால் அனைவரும் கோலியைப் பற்றி வாயை மூடிக்கொள்வார்கள் என்றும் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

அதாவது பாகிஸ்தானுக்கு எதிராக அரைசதம் அடித்தால் போதுமாம்.
ஆனால் ரவி சாஸ்திரி கோலி எது செய்தாலும் கொம்பு சீவிவிட்டுக் கொண்டு அவருக்கு சொம்புதூக்கியதால்தான் அவரது பேட்டிங்கே ஒன்றுமில்லாமல் போய்விட்டது என்று சாஸ்திரி மீது கடும் விமர்சனங்கள் இருந்துவரும் நிலையில், ஒரு அரைசதம் அனைவரது வாயையும் மூடிவிடும் என்று ஏதோ அறிமுகமாகி 10 போட்டிதான் ஆகிறது விராட் கோலிக்கு என்பது போல் மிகவும் வெகுளியாகக் கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் குறித்து தனியார் டி.வி. சேனல் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த பேட்டியில் 'இயல்பான மனநிலையில் உள்ள இந்திய வீரர் விராட் கோலி. வலுவாக மீண்டு வருவார். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்திலேயே அரைசதம் அடித்து விட்டால் போதும். எஞ்சிய ஆட்டங்களுக்கு விமர்சகர்களின் வாயை அடைந்து விடுவார்.

Also Read: சில்லுனு மழை.. ஸ்கூட்டரில் ஜாலி ரைடு - விராட் கோலி அனுஷ்கா வைரல் வீடியோ..!

கடந்த காலத்தில் நடந்தது முடிந்த போன விஷயம். ரசிகர்களுக்கும் குறுகிய நினைவுதான். பெரிய ஆட்டக்காரரான அவர் உரிய நேரத்தில் பார்முக்கு வந்து விடுவார். பணிச்சுமையில் இருந்து விடுபட வீரர்களுக்கு ஓய்வு தேவை. மோசமாக விளையாடும் தருணத்தை, பார்ம் அவுட் ஆகும் காலக்கட்டத்தை  எதிர்கொள்ளாத வீரர்கள் இந்த உலகில் யாரும் கிடையாது, கோலி ஒரு எந்திரம், அவர் நிச்சயம் பார்முக்கு வந்து விடுவார். அவருக்கு இருக்கும் ரன் பசியும் கிரிக்கெட் மீதான ஆர்வமும் நம்ப முடியாதது’ என்றார் ரவி சாஸ்திரி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 18 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 872 ரன்களையே எடுத்துள்ளார். கடைசி சதம் எடுத்த பிறகு விராட் கோலியின் டெஸ்ட் சராசரி 27-ல் தேங்கியுள்ளது. அதாவது ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த போதே விராட் கோலியின் பேட்டிங் உத்தி அம்பலமானது, ஆனால் அதை மாற்றியமைக்கவோ, அவருக்கு இது பிரச்சனையாகும் என்றுமோ உணராத தலைமைப்பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாவம் இன்று விராட் கோலி அரைசதம் எடுத்து பார்முக்கு வருவார் என்று கூறுவது விராட் கோலி மீதான பரிதாப உணர்வையே அதிகரிக்கிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ஆசியக் கோப்பை டி20 போட்டி இம்மாதம் 28ம் தேதி தொடங்குகிறது. அங்கு ஷாஹின் அஃப்ரீடி இல்லாததால் பாகிஸ்தானுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது, இங்கு பும்ரா, ஷமி இல்லாததும் நமக்குப் பின்னடைவே.
Published by:Ramprasath H
First published:

Tags: Asia cup cricket, Ravi Shastri, Virat Kohli

அடுத்த செய்தி