#INDvWI: பல சாதனைகளை படைக்க காத்திருக்கும் விராட் கோலி

வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான மூன்று டி 20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

news18
Updated: August 8, 2019, 12:14 PM IST
#INDvWI: பல சாதனைகளை படைக்க காத்திருக்கும் விராட் கோலி
விராட் கோலி
news18
Updated: August 8, 2019, 12:14 PM IST
வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பல சாதனைகளைப் படைக்க உள்ளார்.

இந்தியா-வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு கயானாவில் உள்ள ப்ரோவிடென்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்ற மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி 1912 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 1930 ரன்களுடன் முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியின் ஜேவட் மியாண்டாட் உள்ளார். இன்னும் 19 ரன்களே உள்ள நிலையில் இன்றைய போட்டியில் அதை அடித்து விராட் கோலி சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டிஸ் நாட்டில் இந்தியா மோதிய ஒருநாள் போட்டிகளில் ராம்நரேஷ் சர்வான் 700 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். அவருடைய சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 145 ரன்கள் தேவைப்படுகிறது. கோலி 556 ரன்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்

வெஸ்ட் இண்டிஸ் நாட்டில் இந்தியா மோதிய ஒருநாள் போட்டிகளில் கோலி மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர் டெஸ்மாண்ட் ஹேன்ஸ் தலா 2 சதங்களை அடித்துள்ளனர்.

வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு ராசியான மைதானம்! இந்திய அணி வெற்றி பெறுமா?


Also watch

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...