’நான் புதிய இந்தியாவின் பிரதிநிதியாக இருக்கிறேன்’ - விராட் கோலி பேச்சு

விராட் கோலி

புதிய இந்தியாவின் பிரதிநிதியாக தாம் இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  புதிய இந்தியாவின் பிரதிநிதியாக தாம் இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வியாழக்கிழமை தொடங்க இருக்கிறது. இதனையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய கோலி, தான் துவக்கம் முதலே ஆக்ரோஷமாக இருப்பதாகவும், எந்த விதமான சவாலையும் ஏற்க தயாராக உள்ளதாகவும் கூறினார்.

  ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேக் சாப்பல் விராட் கோலியின் போராட்டக் குணத்தை பாராட்டியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, எங்கள் வழியில் குறுக்கிடும் எந்த சவாலையும் ஏற்க இந்தியா தயாராக உள்ளது என்றும் புதிய இந்தியாவின் பிரதிநிதியாக தாம் இருப்பதாகவும் விராட் கோலி கூறியுள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: