முகப்பு /செய்தி /விளையாட்டு / கபில் தேவ், கோலி, தோனி தான் இந்திய கிரிக்கெட்டா? ஹீரோ ஒர்ஷிப் வேண்டாம் - கொந்தளித்த கவுதம் கம்பீர்

கபில் தேவ், கோலி, தோனி தான் இந்திய கிரிக்கெட்டா? ஹீரோ ஒர்ஷிப் வேண்டாம் - கொந்தளித்த கவுதம் கம்பீர்

கம்பீர் காட்டம்

கம்பீர் காட்டம்

ஒளிபரப்பாளர்களாக இருக்கட்டும் மீடியாக்களாக இருக்கட்டும் ரசிகர்களாகவே இருக்கட்டும் இந்திய கிரிக்கெட்டே ஏதோ கோலி, தோனி, கபில் தேவ் என்று அவர்களையே, பிராண்டாக்கி கொண்டாடுகிறது. யாராக இருந்தாலும் அவரை ஹீரோ ஒர்ஷிப் செய்யக் கூடாது. மற்ற வீரர்களையும் கொண்டாட வே?

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

ஒளிபரப்பாளர்களாக இருக்கட்டும் மீடியாக்களாக இருக்கட்டும் ரசிகர்களாகவே இருக்கட்டும் இந்திய கிரிக்கெட்டே ஏதோ கோலி, தோனி, கபில் தேவ் என்று அவர்களையே, பிராண்டாக்கி கொண்டாடுகிறது. யாராக இருந்தாலும் அவரை ஹீரோ ஒர்ஷிப் செய்யக் கூடாது. மற்ற வீரர்களையும் கொண்டாட வேண்டும் என்று கவுதம் கம்பீர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“ஓய்வறையில் நாம் ஹீரோக்கள் எனும் பூதங்களை உருவாக்க வேண்டாம், இந்திய கிரிக்கெட் தான் அங்கு பூதமாக இருக்க வேண்டும். தனிநபர் ஹீரோ பூதங்களை உருவாக்காதீர்” என்கிறார் கவுதம் கம்பீர். மேலும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் அவர் கூறிய போது, முகநூல், உள்ளிட்ட சமூக ஊடகவாதிகளை ‘மிகப்பெரிய போலிகள்’ என்றார். சிறிய, முக்கிய பங்களிப்புகளையும் பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்திய கிரிக்கெட்டில் ஊடகங்களின் பேருதவியுடன் நடப்பது ‘பிராண்ட் உற்பத்தி’ கோலி, தோனி, சச்சின் எல்லாம் வெறும் இந்திய வீரர்கள் மட்டுமல்ல கார்ப்பரேட் ஊடகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் பெரிய பிராண்ட்கள் என்று அந்த ஊடகத்துடன் விவாதம் செல்ல கம்பீர், “இந்த ஒட்டுமொத்த ஹீரோ ஒர்ஷிப் அதாவது நாயக வழிபாட்டுத்துவம் அடுத்த நட்சத்திரம் வருவதை தடுத்து விடுமா என்ன? இந்த ஹீரோ ஒர்ஷிப் என்ற நிழலில் வளர்ந்தவர்கள் நம் கோலியும் தோனியும் மட்டுமே. முன்பு தோனி இப்போது கோலி” என்கிறார் கம்பீர்.

“ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக என்ன நடந்தது?.. கோலி சதமெடுத்தார், புவனேஷ்வர் குமார் அதே போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஆனால் புவனேஷ்வர் குமாரை யாரும் கண்டுக்கொள்ளவே இல்லை. இது பெரிய துரதிர்ஷ்டம். வர்ணனையில் நான் மட்டும்தான் இதைச் சுட்டிக்காட்டினேன். 4 ஓவர் வீசி 5 விக்கெட், யாருக்கும் இது தெரியவில்லை என்றே நினைக்கிறேன்.

ஆனால் கோலி சதமெடுத்தார் என்றால் நாடு முழுதும் ஒரே பேச்சு. இந்தியா இந்த ஹீரோ ஒர்ஷிப் எனும் விளையாட்டு வீரர்களை வழிபடும் தன்மையிலிருந்து விடுபட வேண்டும், வெளியே வர வேண்டும். இந்திய கிரிக்கெட்டாக இருந்தாலும் இந்திய அரசியலாக இருந்தாலும் டெல்லி கிரிக்கெட்டாக இருந்தாலும் இந்த ஹீரோ ஒர்ஷிப் மனோபாவத்திலிருந்து வெளியே வர வேண்டும். இந்திய கிரிக்கெட்டைத்தான் நாம் கொண்டாட வேண்டும்.

நாயக வழிபாட்டு மனோபாவம் எங்கிருந்து வருகிறது? ஒன்று சமூக ஊடகங்கள்.  இதனை பலரும் பின் தொடர்கின்றனர், நாட்டின் மிக மிக போலியானது எது என்றால் இதுதான். எத்தனை பேர் உடன் தொடர்கிறார்கள் என்பதை வைத்து அவரது மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது, இது சுத்தப் போலி. இதுதான் பிராண்ட் கட்டுமானம்.

2வதாக மைய ஊடகங்கள், கிரிக்கெட் ஒளிபரப்பாளர்கள். ஒரே வீரரைப் பற்றி நாள் முச்சூடும் பேசிக்கொண்டே இருந்தால் அவர் பிராண்ட் ஆகி விடுகிறார். ஏன் இதனை தோனியிலிருந்து தொடங்க வேண்டும், 1983 உலகக்கோப்பையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இந்தியா முதல் உலகக்கோப்பையை வென்ற போது எல்லாம் கபில்தான் என்று பேசினார்கள்.

2007, 2011-ல் நாம் வென்ற போது தோனிதான் என்றார்கள். யார் இதை உருவாக்கினார்கள், வீரர்கள் யாரும் இதைச் செய்யவில்லை. பிசிசிஐ-யும் செய்யவில்லை. ஒளிபரப்பாளர்களும் மீடியாக்களும் தான் இதைச் செய்தது, அவர்கள் இந்திய கிரிக்கெட்டைப் பற்றி என்றைக்காவது பேசியிருக்கிறார்களா? இந்திய கிரிக்கெட்டின் பங்குதாரர்கள் என்று 2 அல்லது 3 பேர்களுக்கும் மேல் உள்ளனர். இவர்கள் இந்திய கிரிக்கெட்டை ஆளக்கூடாது.

ஓய்வறையில் இருக்கும் 15 பேர் இந்திய கிரிக்கெட்டை ஆள வேண்டும். அனைவரும் பங்களிப்பு செய்கிறார்கள். நான் என் வாழ்நாளில் யாரையும் வழிபாட்டு மனோபாவத்துடன் கொண்டாடியதில்லை, இதுதான் என் பிரச்சனை என்று நினைக்கிறேன். மீடியாக்களும் ஒளிபரப்பாளர்களும் பிராண்ட்களை உருவாக்குகிறார்கள்.

2011 உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னர் 2-3 சீனியர் வீரர்கள் என்னிடம் வந்து கோப்பையை வென்றேயாக வேண்டும் என்றனர். ஏனெனில் 1983 என்ற உரையாடலை நாம் அபகரிக்க வேண்டும் என்றனர். 1983 உலகக்கோப்பையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றனர்.

நான் சொன்னேன், நான் யாரையும் முடிக்க இங்கு வரவில்லை, யாருடைய கோட்டையும் சிறிதாக்க நான் வரவில்லை. நாம் வெற்றி பெற்று நம் கோட்டை பெரிதாக்குவோம் என்றேன். 1983 பற்றி 2011-ல் வர்ணனையாளர்களாக இருக்கும் 1983 வீரர்கள் பேசினால் அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்துக்கு பேசுகிறார்கள், நாம் வெல்ல வேண்டும் ஏனெனில் இந்த நாடு மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம் என்றேன்.

ஆசியக் கோப்பையில் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட் எடுத்த போது என்ன நடந்தது,  அவரிடம் மைக்கை 5 நிமிடம் கொடுத்தார்கள் அவ்வளவுதான். ஏன், அவர் பிராண்ட் இல்லை. அவரும் கடினமாக உழைத்தவர்தான். அவரும் எளிமையான பின்னணியிலிருந்து வந்தவர்தான். கோலி அளவுக்கு இவருக்கும் பெருமை சேர வேண்டும் அல்லவா? ஏனெனில் அவர் விற்கப்பட முடியாதவர், டிஆர்பி ரேட்டிங்குக்கு ஒத்துவர மாட்டார். மார்க்கெட்டிங் டீம் ஒருவரை விற்க முடியாமல் போனால் அது அவர்கள் பிரச்சனை.

இந்த நிலை 1983லிருந்து உள்ளது. நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக இருந்த போது சிறிய பங்களிப்பை பாராட்டும் ஒரு பண்பாட்டை கொண்டு வந்தேன்.

இவ்வாறு கூறியுள்ளார் கவுதம் கம்பீர்.

First published:

Tags: Gautam Gambhir, Indian cricket team, MS Dhoni, Virat Kohli