‘அது வேற வாய் இது நாற வாய்’- விராட் கோலியைத் தாக்கும் முன்னாள் வீரர்

விராட் கோலி

கிரிக்கெட் இதுவரை கண்டதிலேயே மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஒரு கேப்டன், வீரர் உண்டென்றால் அது விராட் கோலிதான் என்று இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மென் நிக் காம்ப்டன் விமர்சித்துள்ளார்.

 • Share this:
  கிரிக்கெட் இதுவரை கண்டதிலேயே மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஒரு கேப்டன், வீரர் உண்டென்றால் அது விராட் கோலிதான் என்று இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மென் நிக் காம்ப்டன் விமர்சித்துள்ளார்.

  38 வயதாகும் நிக் காம்ப்டன் 2012 முதல் 2016 வரை இங்கிலாந்துக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் 775 ரன்கள் எடுத்துள்ளார். இவர் இந்தியாவுக்கு 2012ம் ஆண்டு பயணம் செய்த போது நடந்த சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

  2012-ல் விராட் கோலியின் கேர்ல் பிரெண்டிடம் நிக் காம்ப்டன் பேசியது கோலிக்குப் பிடிக்காமல் போக தான் ஒவ்வொரு முறை மைதானத்தில் இறங்கும் போதும் காது கொள்ளாத வார்த்தைகளால் தன்னை ஏசினார் விராட் என்று இவர் ஏற்கெனவே ஒரு முறை பதிவிட்டுள்ளார். அதாவது கோலி அந்தப் பெண்ணை தன்னுடைய கேர்ள் பிரெண்ட் என்றார், ஆனால் அவரோ மாஜி பாய் பிரெண்ட் என்று கோலியைக் கூறினார், என்று நிக் காம்ப்டன் ஏற்கெனவே ஒருமுறை தெரிவித்திருந்தார்.

  Also Read: லார்ட்ஸ் தோல்வி எதிரொலி: இங்கிலாந்து அணியில் மாற்றங்கள்

  இப்போது ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் ‘இது உன் வீட்டு கொல்லைப்புற கிரிக்கெட் அல்ல’ என்று கூறியதோடு, மைதானத்தில் ஏகப்பட்ட நாடகீயங்களை அரங்கேற்றும் சார்பட்டா டான்சிங் ரோஸ் ஆகிவிட்ட விராட் கோலி களத்தில் பேசிக்கொண்டே இருக்கிறார். எதிரணி பேட்ஸ்மென்களுக்கு அமைதியாக ஆடும் உரிமை உள்ளது என்பதை மறந்து ஏதாவது கத்திக் கொண்டும் பேசிக்கொண்டும் சேட்டைகளில் ஈடுபடும் கோலியை ஐசிசி கண்டிக்க வேண்டும், அல்லது இந்திய அணியின் கவுரவத்தைக் காப்பாற்றுமாறு யாராவது கோலிக்கு அறிவுறுத்துவது நல்லது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில்தான் நிக் காம்ப்டன் மீண்டும் தன் சமூக ஊடகப் பக்கத்தில், “கிரிக்கெட்டில் மிகவும் மோசமான வசைகளை ஏவிவிடும் நபர் விராட் கோலியாகத்தான் இருக்க முடியும். 2012-ல் அவர் என் மீது பொழிந்த வசைகளை காது கொடுத்து கேட்க முடியாது. இதன் மூலம் தனக்குத்தானே அவர் குழி தோண்டிக்கொள்கிறார். இவரை ஒப்பிடும்போது ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கர், கேன் வில்லியன்சன் எவ்வளவு நிதானமானவர்கள், விவேகமானவர்கள் என்பது புரியும்” என்றார் நிக் காம்ப்டன்.
  Published by:Muthukumar
  First published: