• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Virat Kohli| துணைக் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை தூக்கச் சொன்னாரா கோலி?

Virat Kohli| துணைக் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை தூக்கச் சொன்னாரா கோலி?

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

விராட் கோலி டி20 கேப்டன்சி உதறல் பின்னணி நிலவரம் குறித்து பலவகையான மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில் குறிப்பாக ரோகித் சர்மாவை ஒருநாள் அணி துணைக்கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி தூக்கச் சொன்னதாக ஏஜென்சி செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.

  • Cricketnext
  • Last Updated :
  • Share this:
    விராட் கோலி டி20 கேப்டன்சி உதறல் பின்னணி நிலவரம் குறித்து பலவகையான மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில் குறிப்பாக ரோகித் சர்மாவை ஒருநாள் அணி துணைக்கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி தூக்கச் சொன்னதாக ஏஜென்சி செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.

    கோலி-ரோகித் சர்மாவிடையே சரியான உறவு இல்லை என்ற செய்திகள் கொஞ்ச காலமாகவே உலா வந்தவண்ணம் இருந்தன. கோலி தனக்கு அடுத்தபடியாக 2வது இடம் யாருக்குச் செல்லும் என்று லேசாகத் தெரிந்தாலும் அவரை அணியிலிருந்து நீக்கி விடுவார், ரகானே ஒரு உதாரணம், அஸ்வின் இன்னொரு உதாரணம், இப்போது ரோகித் சர்மா என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

    பிடிஐ செய்தி ஏஜென்சியின் தகவல்களின்படி, 34 வயதாகி விட்டது எனவே ரோகித் சர்மாவை துணைக் கேப்டன் பொறுப்பிலிருந்து தூக்கி விட்டு கே.எல்.ராகுலை நியமிக்கக் கோலி கோரியாதாகவும் டி20-யிலும் தனக்கு துணையாக ரிஷப் பந்த்தை துணைக் கேப்டனாக நியமிக்குமாறும் கோலி நிர்பந்தித்துள்ளார். கோலிக்கே வயது 32 ஆகிறது. அதாவது தனக்கு அடுத்ததாக ஒருவரை கோலி விரும்பவில்லை என்பதாகவே கிரிக்கெட் வாரியம் கருதியதாக பிடிஐயிடம் பிசிசிஐ சோர்ஸ் ஒன்று கூறியுள்ளது.

    எப்படியிருந்தாலும் உலகக்கோப்பை டி20-யை வெல்லவில்லை எனில் வெள்ளைப்பந்து கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன்சி தன்னிடமிருந்து பறிக்கப்படும் என்பதை அறிந்தே கோலி தானே விலகுவதாக அறிவித்துள்ளதாக அந்த செய்திகள் கூறுகின்றன. இது அவர் மீது அவருக்கேயுள்ள அழுத்தத்தை குறைத்திருக்கும்.

    Also Read: ஷிகர் தவான் வேண்டும் என்று பிடிவாதம்.. தேர்வுக்குழுவுடன் வேறுபாடு: கோலி கேப்டன்சி உதறல் பின்னணி விவரம்
     எனவே பிடிஐ செய்திகளின் படி ஒருநாள் அணி கேப்டன்சியிலிருந்தும் கோலி விரைவில் அனுப்பப்படுவார் என்று தெரிகிறது. நிறைய அதிருப்திகளை அவர் அதற்குள் சம்பாதித்து கொண்டார் என்பதே அவரது கேப்டன்சி பிரச்சனைகளுக்குக் காரணம் என்கிறது அந்த செய்தி அறிக்கை.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: