Home /News /sports /

ஒழுக்கத்தையும் தொழில் முறையையும் வலியுறுத்தியது தப்பா: கும்ப்ளே- கோலி விவகாரத்தை வெளியிட்ட விநோத் ராய்

ஒழுக்கத்தையும் தொழில் முறையையும் வலியுறுத்தியது தப்பா: கும்ப்ளே- கோலி விவகாரத்தை வெளியிட்ட விநோத் ராய்

விராட் கோலி - அனில் கும்ப்ளே - பிர்ச்சனை என்ன?

விராட் கோலி - அனில் கும்ப்ளே - பிர்ச்சனை என்ன?

கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் கடும் உரசல்கள் ஏற்பட்டு தினமும் கிரிக்கெட் நிர்வாகக் குழுவுக்கு கும்ப்ளேயை நீக்குமாறு விராட் கோலி மெசேஜ் செய்தவண்ணம் இருந்ததாக அந்தக் குழுவில் இருந்த வரலாற்றாசிரியர் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் ராமச்சந்திர குஹா அப்போதே தெரிவித்து கோலி மீது கடும் விமர்சனங்களை வைத்தது அப்போது பத்திரிகைகளில் சூடான செய்தியாக இருந்தது.

மேலும் படிக்கவும் ...
  முன்னாள் இந்திய கணக்குத் தணிக்கைக் குழு தலைமைக் கட்டுப்பாட்டாளர் விநோத் ராய், பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தற்காலிகமாக கலைத்து உச்ச நீதிமன்றம் நியமித்த Committee of Administrators (CoA) என்ற குழுவின் தலைவராக இருந்தார். அப்போதுதான் அனில் கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்தார்.

  கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் கடும் உரசல்கள் ஏற்பட்டு தினமும் கிரிக்கெட் நிர்வாகக் குழுவுக்கு கும்ப்ளேயை நீக்குமாறு விராட் கோலி மெசேஜ் செய்தவண்ணம் இருந்ததாக அந்தக் குழுவில் இருந்த வரலாற்றாசிரியர் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் ராமச்சந்திர குஹா அப்போதே தெரிவித்து கோலி மீது கடும் விமர்சனங்களை வைத்தது அப்போது பத்திரிகைகளில் சூடான செய்தியாக இருந்தது.

  அப்போது விநோத் ராய் இந்த நிர்வாகிகள் குழு தலைவராக இருந்த போது கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பிசிசிஐக்கு பதில் இவர்கள்தான் வாரியத்தை நடத்தினர், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி. இந்நிலையில் முன்னாள் இந்திய தணிக்கைக் குழு தலைமைக் கட்டுப்பாட்டாளர் விநோத் ராய் ஒரு புத்தகம் ஒன்றை சமீபத்தில் எழுதியுள்ளார். அது, “Not Just a Nightwatchman — My Innings in the BCCI” என்பதில் கோலி-கும்ப்ளே விவகாரத்தை எழுதியுள்ளார்.

  இதில் அனில் கும்ப்ளே மிகவும் கட்டுக்கோப்பையும் ஒழுக்கத்தையும் அணி வீரர்களிடத்தில் புகுத்தினார் என்றும் இதனால் இளம் வீரர்கள் அவரைப் பார்த்தாலே அஞ்சி நடுங்கினார்கள் என்றும் விராட் கோலி அணி வீரர்கள் சார்பாக புகார் எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.

  அந்த நூலின் இந்தப் பகுதியின் துளியை வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் மேற்கோளின் படி விநோத் ராய், “கேப்டன் கோலியுடன் என் உரையாடல்களைப் பொறுத்தவரை அனில் கும்ப்ளே கொஞ்சம் ஓவரான கண்டிப்பு ஆசாமி என்றும் அதிக ஒழுக்கக் கட்டுப்பாடுகளை விதிக்கிறார் என்றும் அவரைப் பார்த்தாலே இளம் வீரர்கள் பயப்படுகின்றனர் என்றும் இது குறித்து கோலியிடம் பேசியபோது அணி வீரர்கள் அவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் கோலி புகார் எழுப்பியதாக விநோத் ராய் எழுதியுள்ளார்.

  மாறாக அனில் கும்ப்ளே இந்த விவகாரம் எழுப்பப்பட்டவுடன் தன்னை நியாயமற்ற முறையில் நடத்துகிறீர்கள் என்று கூறினார், இது தொடர்பாக விநோத் ராய் தன் புத்தகத்தில், “கும்ப்ளே யுகேயிலிருந்து திரும்பிய பிறகு நீண்ட உரையாடலை நடத்தினோம். அவர் உண்மையில் இந்த ஒட்டுமொத்த விவகாரமும் வெளியான விதம் பற்றி மிகவும் ஏமாற்றமடைந்தார், அதிருப்தி அடைந்தார்.

  கேப்டன் மற்றும் அணி வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக அவர் நொந்து கொண்டார். ஒரு பயிற்சியாளரின் கடமை அணியில் கட்டுக்கோப்பையும் தொழில்முறையையும் கொண்டு வருவதுதான். ஒரு மூத்த வீரராக தன் கருத்துகளை வீரர்கள் மதிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.” என்று எழுதியுள்ளார்.

  கடைசியில் இந்த விவகாரத்தில் சச்சின் லஷ்மண், கங்குலி அடங்கிய கிரிக்கெட் நிர்வாகக் கமிட்டியின் முன் வந்த போது 2017 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியின் போது விராட் கோலி, அனில் கும்ப்ளேவிடம் பேச்சு நடத்தினர்.

  “ஆனால் இவர்களுமே கும்ப்ளேவுக்கும் கோலிக்குமான பிரச்சனை கடுமையானது என்று உணர்ந்தனர். பிறகு கும்ப்ளே, கோலி இருவரிடமும் தனித் தனியாகப் பேசினர். பேசி முடித்த பிறகு கும்ப்ளே பயிற்சியாளராகத் தொடர்வார் என்று முடிவெடுத்தனர். ஆனால், கும்ப்ளே, ‘அணியின் கேப்டன் தன் பாணி கோச்சிங் மீது அதிருப்தி கொண்டுள்ளதால் சரிப்பட்டு வராது என்று ராஜினாமா செய்தார்” என்று விநோத்ராய் எழுதியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published:

  அடுத்த செய்தி