ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சிக்சர் அடித்துவிட்டு தோனியின் பெயரைச் சொன்ன விராட் கோலி… வீடியோவை கொண்டாடும் ரசிகர்கள்….

சிக்சர் அடித்துவிட்டு தோனியின் பெயரைச் சொன்ன விராட் கோலி… வீடியோவை கொண்டாடும் ரசிகர்கள்….

விராட் கோலி

விராட் கோலி

போட்டியின்போது இலங்கை பவுலர் கசுன் ரஜிதா வீசிய 44 ஆவது ஓவரின் 4ஆவது பந்தை கோலி சிக்சராக பறக்கவிட்டார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி போட்டியில் சிக்சர் அடித்த விராட் கோலி, பின்னர் தோனியின் பெயரை உச்சரித்தார். இதுதொடர்பான வீடியோவை தோனி, விராட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதற்கு  விராட் கோலி முக்கிய காரணமாக அமைந்தார்.

விராட் கோலி சிறப்பாக விளையாடி 110 பந்துகளில் 166 ரன்களை எடுத்தார். இவற்றில் 8 சிக்சர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும். நேற்று அடித்த சதத்தின் மூலம் கிரிக்கெட் லெஜெண்ட் சச்சினின் 2 சாதனைகளை தகர்த்துள்ளார் விராட் கோலி.

இந்த போட்டியின்போது இலங்கை பவுலர் கசுன் ரஜிதா வீசிய 44 ஆவது ஓவரின் 4ஆவது பந்தை கோலி சிக்சராக பறக்கவிட்டார். ஸ்லோ பாலாக வந்த இதனை லாங் ஆன் திசைக்கு கோலி விரட்ட, பந்து 97 மீட்டர் தூரம் சென்று விழுந்து சிக்சானது. இந்த ஷாட்டை தோனியின் ஹெலிகாப்டர் ஸ்டைலில் விளாசினார் கோலி. இதனை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை கோலி ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர். சிலர் இந்த ஷாட் ஏ.பி. டிவில்லியர்ஸ் ஸ்டைலில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சிக்சர் அடித்து விட்டு பார்ட்னர் ஷ்ரேயாஸ் அய்யரிடம் ‘மஹி ஷாட்’ என்று தோனியின் பெயரை விராட் கோலி குறிப்பிட்டார். முதலில் விராட் கோலியின் இந்த ரியாக்சன் அதிகம் கவனிக்கப்படாத நிலையில், இன்று அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

First published:

Tags: Cricket, Virat Kohli