INDvWI | புதிய சாதனை படைத்த 'ரன்மெஷின்' விராட் கோலி!
INDvWI | புதிய சாதனை படைத்த 'ரன்மெஷின்' விராட் கோலி!
ICC World Cup 2019 | India vs West Indies | Virat Kohli | இந்திய அணியின் 2வது வீரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 37 ரன்களை கடந்த போது 20,000 ரன்களை கடந்தார்.
ICC World Cup 2019 | India vs West Indies | Virat Kohli | இந்திய அணியின் 2வது வீரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 37 ரன்களை கடந்த போது 20,000 ரன்களை கடந்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் குறைந்த சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரின் 34வது லீக் போட்டியில் இந்தியா -மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் 2வது வீரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 37 ரன்களை கடந்த போது 20,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் குறைந்த சர்வதேச போட்டிகளில் (417) 20,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 27, 2019
இதற்கு முன் சச்சின், லாரா 453 போட்டிகளில் 20,000 ரன்களை கடந்த வீரர்கள் என்ற சாதனையை இருவரும் கூட்டாக வைத்த்திருந்தனர். இவர்களுக்கு அடுத்து ரிக்கி பாண்டிங் 468 போட்டிகளில் 20,000 ரன்களை கடந்துள்ளார்.
Also Watch
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.