ICC Ranking: டெஸ்டில் எப்போதும் நான்தான் ‘கிங்’!
#ViratKohli maintain top spot in #ICCTestrankings | கோலி, சிறந்த கேப்டனாக மட்டுமல்லாமல் சிறந்த பேட்ஸ்மேனாகவும் வலம் வருகிறார்.

விராட் கோலி (BCCI)
- News18
- Last Updated: January 21, 2019, 7:52 PM IST
சர்வதேச டெஸ்ட் அரங்கில் எப்போதும் தான் ‘கிங்’ என்பதை விராட் கோலி தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. முதலில் நடந்த டி-20 தொடர் சமனில் முடிந்தது.
இதனை அடுத்து, ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்தது. கோலி, சிறந்த கேப்டனாக மட்டுமல்லாமல் சிறந்த பேட்ஸ்மேனாகவும் வலம் வருகிறார்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், 922 புள்ளிகளுடன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

கோலியை தொடர்ந்து, 897 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 2-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த புஜாரா, 881 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறார். இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் 17-வது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா, 711 புள்ளிகளுடன் 15-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் தென்னாப்ரிக்காவின் ரபடா முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் ஜடேஜா 5-வது இடத்திலும், அஸ்வின் 9-வது இடத்திலும் உள்ளனர்.

அணிகளுக்கான தர வரிசையில், 116 புள்ளிகளுடன் இந்திய டெஸ்ட் அணி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. 2-வது இடத்தில் தென்னாப்ரிக்காவும், 3-வது இடத்தில் இங்கிலாந்தும் உள்ளன.
Photos: ஆஸி. ஓபனில் செரீனாவின் அசத்தல் கிளிக்ஸ்!
Also Watch...

வெற்றிக் கோப்பையை கையில் ஏந்திய அளவற்ற மகிழ்ச்சியில் கேப்டன் விராட் கோலி. (Image: AP)
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், 922 புள்ளிகளுடன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் விராட் கோலி தனது 25-வது சதத்தை அடித்தார்.(BCCI)
Loading...
கோலியை தொடர்ந்து, 897 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 2-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த புஜாரா, 881 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறார். இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் 17-வது இடத்தில் உள்ளார்.

சிட்னி டெஸ்டில் புஜாரா தனது 18-வது டெஸ்ட் சதத்தை அடித்தார். (BCCI)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா, 711 புள்ளிகளுடன் 15-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் தென்னாப்ரிக்காவின் ரபடா முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் ஜடேஜா 5-வது இடத்திலும், அஸ்வின் 9-வது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பும்ரா. (BCCI)