இந்தூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி ஏற்படுத்தவுள்ள சாதனைகள் வரிசையில் காத்திருக்கின்றன. இந்த டெஸ்டில் கோலி ஓரளவு ரன்களை குவித்தால் புதிய உச்சம் தொட்டு சச்சின், டிராவிட், கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்களின் சாதனை பட்டியலில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது 4 டெஸ்ட்களில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் பேட்டிகளில் அந்த அணி படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில்,10 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் இன்று 3 ஆவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும். அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரிப்பதோடு, டெஸ்ட் அணிகளில் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறவும் வாய்ப்புள்ளது. இந்த டெஸ்டில் விராட் கோலி ஏற்படுத்தவுள்ள சாதனைகள் பின்வருமாறு-
இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் சதம் அடித்து அருமையான ஃபார்மில் உள்ளார். விராட் கோலி 2 டெஸ்டில் 3 இன்னிங்ஸ்களில் விளையாடி 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket