Home /News /sports /

தொடர்ந்து விராட் கோலியின் தலைமையில் தான் விளையாடுவேன் - ரோகித் சர்மா

தொடர்ந்து விராட் கோலியின் தலைமையில் தான் விளையாடுவேன் - ரோகித் சர்மா

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    விராட் கோலியின் தலைமையின் கீழ் விளையாடிய ஒவ்வொரு போட்டியையும், தருணத்தையும் ரசித்து விளையாடினேன் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளதோடு இனியும் கூட கோலியின் தலைமையின் கீழ்தான் ஆடுவேன் என்று கூறியுள்ளார்.

    பொதுவாக பெரிய நடிகர்களுக்கு இடையே ஏகப்பட்ட ஈகோ மோதல்கள் இருக்கும் ஒருவரின் வளர்ச்சி இன்னொருவருக்குப் பிடிக்காது, ஆனால் வெளியில் பேசிக்கொள்வதைப் பார்த்தால் ‘நண்பனே, எனது உயிர் நண்பனே, நீண்ட நாள் உறவிது, என்றுமே தொடர்வது’ என்ற பாடல் போன்று பேசிக்கொள்வார்கள், இது சினி உலகில் சகஜம், ஆனால் இந்த பிக் பாஸ் காலத்தில் கிரிக்கெட்டுக்குள்ளும் பகைமையை மறைத்து நட்பு இருப்பதான பாவனை இருக்கத்தானே செய்யும்.

    டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். இதையடுத்து, புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ஆனால், தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் கோலி கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா திடீரென கேப்டனாக அறிவிக்கப்பட்டு, கோலிநீக்கப்பட்டார்.

    கோலியிடம் இருந்து கேப்டன் பதவிபறிக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தரப்பிலும், அதன் தலைவர் கங்குலியும் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது கோலியிடம் டி20 கேப்டன்சியை உதற வேண்டாம் என்று கேட்டு கொண்டதாகவும் ஆனால் அவர் அதை மீறி ராஜினாமா செய்தார், அதனால் டி20, ஒருநாள் கிரிக்கெட்டுகளுக்கு வேறு வேறு கேப்டன்களை வைத்திருப்பது அபத்தம் எனவே ஒருநாள் கேப்டன்சியும் ரோகித்திடம் அளிக்கப்பட்டது என்று விளக்கம் அளித்தார்

    இந்நிலையில் பிசிசிஐஇணையதள தொலைக்காட்சிக்கு கேப்டன் ரோகித் சர்மா பேட்டி அளித்தார். அவரிடம் கோலியின் கேப்டன்ஷியில் விளையாடிய தருணத்தை எவ்வாறு உணர்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு ரோகித் சர்மா அளித்த பதிலில் “5ஆண்டுகள் விராட் கோலி அணியை வழிநடத்திய அந்த நாட்கள் சிறந்த தருணங்கள். ஒவ்வொருமுறையும் களத்துக்குள் களமிறங்கும் போதும், சரியான தீர்மானத்துடன், தீர்க்கமான முடிவுடன், வெற்றி பெற வேண்டும் என்ற திடமான மனதுடன் களமிறங்க வைப்பார். வீரர்களுக்கு தெளிவான, சரியான தகவல் கோலியிடம் இருந்து வரும்.

    Also Read: காகிதத்துக்கு முழுதும் குட்-பை’- உலகின் முதல் அரசாக மாறி துபாய் சாதனை

    கோலியின் தலைமையில் கீழ் விளையாடிய போட்டிகள் மிகப்பெரிய தருணங்கள். அவருக்கு கீழ் பல போட்டிகளை விளையாடி இருக்கிறேன். ஒவ்வொரு போட்டியையும, தருணத்தையும் ரசித்து, அனுபவித்து விளையாடியிருக்கிறேன். தொடர்ந்து அவரின் கீழ் விளையாடவே விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Rohit sharma, Virat Kohli

    அடுத்த செய்தி