• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்தத் தொடரை வெற்றிப்பாதைக்குத் திருப்பியதில் ரோகித் சர்மா இன்னிங்ஸ் மிக முக்கியம்: விராட் கோலி ஒப்புதல்

இந்தத் தொடரை வெற்றிப்பாதைக்குத் திருப்பியதில் ரோகித் சர்மா இன்னிங்ஸ் மிக முக்கியம்: விராட் கோலி ஒப்புதல்

விராட் கோலி

விராட் கோலி

உள்நாட்டில் கேப்டனாக 23 டெஸ்ட் வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய லெஜண்ட் ஸ்டீவ் வாஹ் (22 வெற்றி) கேப்டன்சி சாதனையை முறியடித்தார் கோலி. அதே போல் தொடர்ச்சியாக 10 உள்நாட்டு டெஸ்ட் தொடர் வெற்றிகளைச் சாதித்து ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்துள்ளார் விராட் கோலி.

  • Share this:
    அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இந்தியா 3 நாட்களில் வென்று தொடரை 3-1 என்று கைப்பற்றி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. மேலும் கேப்டனாக விராட் கோலி சில பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

    உள்நாட்டில் கேப்டனாக 23 டெஸ்ட் வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய லெஜண்ட் ஸ்டீவ் வாஹ் (22 வெற்றி) கேப்டன்சி சாதனையை முறியடித்தார் கோலி. அதே போல் தொடர்ச்சியாக 10 உள்நாட்டு டெஸ்ட் தொடர் வெற்றிகளைச் சாதித்து ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்துள்ளார் விராட் கோலி.

    இந்நிலையில் அவர் இன்று ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் கூறியதாவது:

    2வது டெஸ்ட்டில் மீண்டு வந்து வெற்றி பெற்றதுதான் எனக்கு மிக்க மகிழ்ச்சியளித்தது.. முதல் டெஸ்ட் தோல்வி ஒரு பிறழ்வுதான். டாஸ் அதில் முக்கியப் பங்கு வகித்தது.

    ஆம் அக்சர், சுந்தர் தயாராகி விட்டனர், இளம் வீரர்கள் அணிக்குள் வந்து அச்சமற்ற கிரிக்கெட்டை ஆடுவது மன நிறைவைத் தருகிறது. ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் ஆட்டத்தின் போக்கை மாற்றினர். அக்சர் கூட சிறப்பாக பேட் செய்தார். தொடரை வென்றது மகிழ்ச்சிதான், ஆனால் எப்போதும் மேம்படுவதற்கு சில விஷயங்கள் இருக்கவே செய்கின்றன.

    எதுவும் உத்தரவாதம் இல்லை எந்த அணியும் சர்வதேச அணிதான். அணித்தேர்வு விவகாரங்களில் வரும் காலங்களில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும், ஆனால் என்ன இருந்தாலும் அவற்றைச் சரி செய்து இலகுவாகப் பயணிப்போம். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 6-7 ஆண்டுகளாக பிரமாதமாக ஆடுகிறார், அவரைத்தான் நம்பியிருக்கிறோம்.

    முதல் டெஸ்ட்டில் தோற்ற பிறகு மீண்டெழுவதற்கு ரோகித் சர்மா அடித்த சதம் மிகப்பெரியது, அத்தகைய பிட்சில் 150+ ரன்கள் என்பது எந்த பேட்டிங் பிட்சிலும் 250 ரன்களுக்குச் சமம். தொடர் முழுதும் முக்கியமான இன்னிங்ஸ்களை அவர் ஆடினார். கூட்டணி அமைத்தார்.

    இப்போது நாம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்குள் சென்று விட்டோம் என்று ஏற்றுக் கொள்வோம், அது ஒரு பெரிய கவனச்சிதறல். நியூஸிலாந்தில் ஆடும்போதும் இந்த கவனச் சிதறல் இருந்தது. ஆனால் அதன் பிறகே ஒரு சமயத்தில் ஒரு போட்டியில் கவனம் செலுத்தி வருகிறோம்.

    இவ்வாறு கூறினார் விராட் கோலி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: