ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘ஆளுமை மிக்கவர் விராட் கோலி….’ – பாராட்டித் தள்ளும் சி.எஸ்.கே. ஆல்ரவுண்டர்…

‘ஆளுமை மிக்கவர் விராட் கோலி….’ – பாராட்டித் தள்ளும் சி.எஸ்.கே. ஆல்ரவுண்டர்…

விராட் கோலி

விராட் கோலி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி முக்கிய ஆட்டக்காரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விராட் கோலி தனித்துவம் வாய்ந்தவர், ஆளுமை மிக்கவர் என்று அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் பாராட்டித் தள்ளியுள்ளார். அவரது பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக திறமையாக செயல்பட்ட விராட் கோலி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 2014ஆம் ஆண்டு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பதிலாக, விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார்.

இந்திய அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விராட் கோலி ராஜினாமா செய்து ஓராண்டு ஆக உள்ளது. கடந்த சில மாதங்களாக ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்த விராட் கோலி, வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சதம் அடித்து அசத்தினார். பின்னர் இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் கோலி சதம் அடித்தார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் விராட் கோலி முக்கிய ஆட்டக்காரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விராட் கோலி குறித்து  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான மொயின் அலி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-  எனக்கு பிடித்தமான இந்திய கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டால், நான் விராட் கோலியைத்தான் சொல்வேன். அவரிடம் தனித்துவமான குணம் இருக்கிறது. அவருடன் இணைந்து விளையாட, அவருடன் பொழுதை கழிக்க அனைவரும் விரும்புவார்கள்.

இலங்கைக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி… இந்திய அணியின் ஆடும் லெவனில் மாற்றம் இருக்குமா?

ஆளுமை என்ற அடிப்படையில் பார்த்தால் அவரை போன்ற ஆளுமைமிக்கவரை நான் இதுவரை பார்த்ததில்லை. கிரிக்கெட்டில் சிறந்த வீரர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் தனிப்பட்ட பண்புகள் அடிப்படையில் விராட் கோலியின் நட்பை பெரிதாக உணருகிறேன். அதேபோன்று என்னை ஈர்த்தவர்களில் தோனி முதன்மையானவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்

First published:

Tags: Cricket