ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்த நாட்டில் விராட் கோலி தான் பெரிய பேட்டர் - கெவின் பீட்டர்சன் கருத்து

இந்த நாட்டில் விராட் கோலி தான் பெரிய பேட்டர் - கெவின் பீட்டர்சன் கருத்து

விராட் கொலி, சச்சின் டெண்டுல்கர்

விராட் கொலி, சச்சின் டெண்டுல்கர்

எப்போது கிரிக்கெட்டில் தனியார்மயம் புகுந்ததோ அப்போது முதல் கிரிக்கெட் வளர்ச்சி, கிரிக்கெட் மேம்பாடு, திறன் வளர்ப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு பிராண்ட் கட்டுமானம், பிராண்ட் வளர்ச்சி, ஸ்பான்சர், விளம்பரம், வர்த்தகம் அதற்குத் தகுந்த அணித்தேர்வு, ஏலத்திலும் கூட பிராண்ட், ஸ்பான்சர் மற்றும் வணிக முத்திரைகள், லாபிகள்தான் வீரரின் தொகையை நிர்ணயிக்கின்றன.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  எப்போது கிரிக்கெட்டில் தனியார்மயம் புகுந்ததோ அப்போது முதல் கிரிக்கெட் வளர்ச்சி, கிரிக்கெட் மேம்பாடு, திறன் வளர்ப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு பிராண்ட் கட்டுமானம், பிராண்ட் வளர்ச்சி, ஸ்பான்சர், விளம்பரம், வர்த்தகம் அதற்குத் தகுந்த அணித்தேர்வு, ஏலத்திலும் கூட பிராண்ட், ஸ்பான்சர் மற்றும் வணிக முத்திரைகள், லாபிகள்தான் வீரரின் தொகையை நிர்ணயிக்கின்றன.

  இந்நிலையில் ஆர்சிபி முன்னாள் கேப்டன் விராட் கோலி ஒரு பெரிய பிராண்ட், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணிக்கு எப்படி கிறிஸ்டியானோ ரொனால்டோ பெரிய பிராண்டோ அதே போல் விராட் கோலி ஒரு கிரிக்கெட் பிராண்ட் என்கிறார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டனும் தற்போது ஐபிஎல் வர்ணனையாளருமான கெவின் பீட்டர்சன்.

  அன்று ஏகப்பட்ட சொதப்பல் இன்னிங்ஸ்களுக்குப் பிறகு கோலி 53 பந்துகளில் 58 ரன்களை எடுத்து பார்முக்கு வந்தார், ஆனால் இது போதாமல் போய் அன்று குஜராத் டைட்டன்ஸ் வெளுத்துக் கட்டி விட்டது. இந்த நிலையில் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது முக்கியமான கட்டம் என்கிறார் கெவின் பீட்டர்சன்.

  அவர் என்ன கூறுகிறார் என்பதைக் கேட்போம், “கோலி என்ன செய்ய வேண்டுமெனில் அவரது ஆதர்சமான மான்செஸ்டர் யுனைடெட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவைப் பார்க்க வேண்டும். இவர்கள் இருவரும் பெரிய பிராண்ட்கள், இவர்கள் இருவருமே பேசுபொருள்கள். இந்த இரண்டு பிராண்டுகளும் வெற்றி பெற்றால்தான் பிராண்ட்களாகும்.

  விராட் கோலி இந்தியாவுக்காக எத்தனைப் போட்டிகளை சேசிங்கில் வெற்றிகரமாக விரட்டியுள்ளார். இந்த நாட்டில் மிகப்பெரிய பேட்டர் விராட் கோலிதான். ஏனெனில் நிறைய போட்டிகளில் இலக்குகளை விரட்டி வெற்றிபெறச் செய்துள்ளார் கோலி. இதை நீங்கள் பார்க்க வேண்டும், இதைத்தான் அவரும் கொண்டாடுகிறார். இதைத்தான் அவர் பெருமையாகவும் கருதுகிறார்.

  டைட்டன்ஸுக்கு எதிராக நல்ல அழகான ஷாட்கள் சிலவற்றை ஆடினார் கோலி. அவர் ஒரு சாம்பியன் என்பதை நான் அறிவேன். அவர் வின்னர், அன்று அவர் இன்னிங்ஸ் வெற்றிக்கு வித்திடவில்லை என்பதை நினைத்து அவர் வெறுப்படைந்திருப்பார்” என்கிறார் பீட்டர்சன்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Cristiano Ronaldo, IPL 2022, Virat Kohli