கோலி சிறந்த ஒரு நாள் பேட்ஸ்மேன்: மைக்கேல் கிளார்க் பாராட்டு!

#ViratKohli is greatest ODI batsman: #MichaelClarke | சிறந்த கேப்டனாக மட்டுமல்லாமல் தனி நபராகவும் சிறந்த பேட்ஸ்மேனாக கோலி வலம் வருகிறார். #AUSvIND

கோலி சிறந்த ஒரு நாள் பேட்ஸ்மேன்: மைக்கேல் கிளார்க் பாராட்டு!
மைக்கேல் கிளார்க் மற்றும் விராட் கோலி.
  • News18
  • Last Updated: January 20, 2019, 8:13 PM IST
  • Share this:
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஒரு நாள் போட்டிக்கான மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை முதல்முறையாக வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. சிறந்த கேப்டனாக மட்டுமல்லாமல் சிறந்த பேட்ஸ்மேனாகவும் கோலி வலம் வருகிறார்.

விராட் கோலி, virat kohli
கேப்டன் விராட் கோலி. (BCCI)சர்வதேச தரவரிசையில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் நம்பர் ஒன் வீரராக விராட் கோலி இருக்கிறார். 219 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 10,000 ரன்களுக்கு மேல் விளாசியுள்ளார். 30 வயதான விராட் கோலி, ஏராளமான சாதனைகளை செய்துள்ளார்.

Virat Kohli Boundary
ஆஸ்திரேலியாவின் பந்தை துவம்சம் செய்த கோலி. (BCCI)


கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 259-வது இன்னிங்சில் 10,000 ரன்களை எடுத்தார். ஆனால், அந்த சாதனையை 205-வது இன்னிங்சிலேயே விராட் கோலி படைத்தார். இந்நிலையில், ஒரு நாள் போட்டிக்கான மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என 2015 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவின் அப்போதைய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

Loading...

Michael Clarke, மைக்கேல் கிளார்க்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்.


“இந்திய அணிக்கான பல சாதனைகளை செய்துள்ள விராட் கோலி, ஒரு நாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் ஆக்ரோஷமாக விளையாடுவார். அதற்காக அவரின் அர்ப்பணிப்பு குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. இந்தியா வெற்றி பெறுவதற்காக விளையாடும் கோலியின் பாணியை மதிக்க வேண்டும்” என்று கிளார்க் தெரிவித்தார்.

உலகிலேயே சிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா: வாசிம் அக்ரம் புகழாரம்..

Also Watch...

First published: January 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...